News
ராகவா லாரன்ஸ் ஜோடியாக நடிக்கும் நயன்தாரா !

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கும் ஒரு புதிய படத்தில் நடிகை நயன்தாரா ஜோடியாக நடிக்கவுள்ளாராம்.
ராகவா லாரன்ஸ் தற்போது நடித்து வரும் திரைப்படம் ருத்ரன். இப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. இதை தவிர தற்போது சந்திரமுகு 2 பாகத்தில் நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ். இப்படத்தை தொடர்ந்து ஜிகிர்தண்டா 2, அதிகாரம் போன்ற படங்களில் நடிக்கவுள்ளார்.
இதனை தொடந்து மேயாத மான் படத்தின் இயக்குநர் ரத்ன குமார் இயக்கும் ஒரு புதிய படத்திலும் நடிக்கவுள்ளார் ராகவா லாரன்ஸ். காமெடி கதையம்சம் கொண்ட இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். இப்படத்தை பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கவுள்ளதாகவும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.