News
ஜென்டில்மேன் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் நயன்தாரா !

அர்ஜூன் நடிப்பில் 1993-ம் வருடம் இயக்குநர் ஷங்கரின் முதல் படமாக வெளியானதுதான் ஜென்டில்மேன். அர்ஜூனுடன் நடிகை மதுபாலா ஜோடியாக நடிக்க தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் இபடத்தை தயாரித்திருந்தார். அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது இப்படம்.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் தயாரிக்க இருப்பதாக அறிவித்தார் கே.டி.குஞ்சுமோன்.
இந்த நிலையில் தற்போது இப்படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் இந்த படத்தின் ஹீரோ யார் இயக்குநர் யார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இன்னும் சில தினங்களில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
பாகுபலி படத்தின் இசையமைப்பாளரான மரகதமணி இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.