News
பிரபாஸ் படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் நயன்தாரா ?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பல வருடமாக நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார். கைவசம் டெஸ்ட், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டூடண்ட், டாக்ஸிக், ராக்காயி உள்ளிட்ட 6 படங்கள் தற்போது வரை கைவசம் வைத்துள்ளார் நயன்தாரா.
இந்த நிலையில் நடிகர் பிரபாஸ் நடிக்கும் ராஜா சாப் எனும் படத்தில் நயன்தாரா ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடவுள்ளார். இதற்கான படப்பிடிப்பு ஜதராபாத்தில் நடைபெறவுள்ளதாம்.
நயன்தாரா இதற்கு முன்னர் சிவாஜி, எதிர்நீச்சல், ஆகிய படங்களில் சிறப்பு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.