News

வடிவேலு பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா !

Published

on

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் அழைப்படும் நடிகை நயன்தாரா காரணம் இவருக்கு இருக்கும் ரசிகர்களும் சரி இவருக்கு இருக்கும் மார்கெட்ட்டும் சரி அந்த அளவுக்கு பரவி கிடக்கிறது.

நயன்தாரா தற்போது அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.நெற்றிக்கண் என்ற படத்தில் நடித்து முடித்து வெளியீட்டுக்காக கத்திருக்கிறார். இந்த படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார்.

ரஜினிகாந்த்துடன் அண்ணாத்த படத்தின் அனைத்து காட்சிகளும் நடித்து முடித்து விட்டாராம் நயன்தாரா. இப்படதில் வழக்கறிஞராக நடிக்கிறாராம் நயன்தாரா.

இந்நிலையில் நயன்தாரா தமிழில் புதிய படமென்றில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் நடித்த போட்டா போட்டி, வைகைப்புயல் வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி போன்ற படங்களை இயக்கிய யுவராஜ் அடுத்து இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகை நயன்தாரா முதன்மை கதாபாதிரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கதையம்சம் கொண்ட படமாக உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version