News
நயன்தாரா – விக்னேஷ் சிவன் மீது மனித உரிமை மீறல் வழக்கு !
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் Nayanthara இருவரும் பல 5 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில் கடந்த வாரம் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்ச்சத்திர ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பின்னர் திருப்பதி சென்று சாமி கும்பிட்டு விட்டு கடந்த 11-ம் தேதி பத்திரிக்கையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்து விட்டு தன் சொந்த ஊரான கேராளாவிற்கு சென்று விட்டார்கள் இருவரும்.
திருமணம் ஆனதும் Nayanthara பிரச்சனையும் ஆரம்பமானது குறிப்பாக திருப்பதி சென்ற போது போட்டோ ஷூட் நடத்திய போது நயன்தாரா காலில் செருப்புடன் இருந்தத புகைப்படம் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது அதற்காக திருப்பதி தேவஸ்தானம் நயன் – விக்கியை கண்டித்து விட்டது. இப்படி செய்தமைக்காக முறைப்படி நோட்டீஸ் அனுப்பு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதிதாக ஒரு பிரச்சனை வந்துள்ளது. மாமல்லபுரத்தில் திருமணம் நடந்தபோது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்கள் கடற்கரை பகுதிக்கு செல்ல முடியவில்லை. கடற்கரை பொது இடம் அங்கு நயன்தாரா திருமணம் நடந்த நாளில் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கவில்லை. இது மனித உரிமை மீறல் என்று தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது. அதை முறைப்படி விசாரணை நடத்தவும் உத்தரவு போடப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் Nayanthara – விக்கி திருமணத்தில் ஒரு பிரச்சனை வந்துள்ளது இதனால் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.