Uncategorized
பெற்றோர்களிடம் ஆசி பெற கேரளா சென்ற நயன்தாரா !
நடிகை Nayanthara 5 வருட காதலனான இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 9-ம் தேதி மாமல்லபுரத்தில் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து கொண்டு கடந்த 11-ம் தேதி சென்னையிலுள்ள ஒரு நட்ச்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர்களையும் சந்தித்து நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
இந்த நிலையில் நயன்தாராவின் சொந்த ஊரான திருவல்லாவுக்கு சென்றுள்ளார். அங்கு நயன்தாராவின் பெற்றோர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி இரண்டு வாரங்களுக்கு அங்கவே தங்கி பெற்றோர்களுடன் நேரத்தை செலவிட திட்டமிட்டுள்ளனர்.
தமிழ் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்தது போல மலையாள பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கவும் உள்ளதாம் இந்த ஜோடிகள் என்றும் கூறப்படுகிறது. என்னதான் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகை என்றாலும் அவரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது தாய் மொழி மலையாளம்தானே.