News
பூஜையுடன் தொடங்கியது நயன்தாரா நடிக்கும் 75-வது படம் !

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நஅடிக்கும் 75-வது படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது. இப்படத்தை நாட் ஸ்டூடியோஸ், ஜீ ஸ்டூடியோஸ், டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ள இப்படத்தில் ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். மிக குறுகிய காலத்தில் இப்படத்தை முடித்து இந்த வருட இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழு.