News

ஆஸ்கார் பட்டியலில் நயன்தாரா தயாரித்த கூழாங்கல் திரைப்படம் !

Published

on

நடிகை நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்துள்ள கூழாங்கல் படம் இந்தியா சார்பில் 94-வது ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே பல சர்வதேச பட விழாக்களில் கூழங்கல் திரையிடப்பட்டு விருதுகள் பெற்றுள்ளதால் ஆஸ்கார் போட்டியிலும் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில் தற்போது ஆஸ்கார் விருதுக்கு போட்டியிடும் வெளிநாட்டு படங்கள் பட்டியலை ஆஸ்கார் விருது இணையதளத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் கூழாங்கல் படமும் இடபெற்றுள்ளது. இது படக்குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விக்னேஷ் சிவன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதியில் ஆஸ்கார் பட்டியலில் எங்கள் படத்தை பார்ப்பது மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

93 நாடுகளில் தயாரான படங்கள் வெளிநாட்டு படங்களுக்கான பிரிவில் போட்டிடுகின்றன. இந்த படங்களில் 15 படங்களை இறுதி செய்து வருகிற 21-ம் தேதி அறிவிக்கவுள்ளனர். கூழாங்கல் படத்தை வினோத் ராஜ் இயக்கியுள்ளார். குடிகார தந்தைக்கும் மகனுக்குமான உறவை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது.

Trending

Exit mobile version