News
ராம் இயக்கத்தில் நிவின்பாலி அஞ்சலி நடிக்கும் புதிய படம் அறிவிப்பு !

‘அமைதிப்படை-2’, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த வி ஹவுஸ் நிறுவனம் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா நடிப்பில் ‘மாநாடு’ என்கிற படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் தனது அடுத்த தயாரிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வி ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார்.
இந்த புதிய படத்தை ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட ஆத்மார்த்தமான படங்களை இயக்கிய இயக்குநர் ராம் இயக்குகிறார்.
‘பிரேமம்’ படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதையும் கொள்ளை கொண்ட, மலையாள திரையுலகில் இளம் முன்னணி நாயகனாக வலம்வரும் நடிகர் நிவின்பாலி இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அஞ்சலி கதாநாயகியாக நடிக்க, சூரி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்