News

நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதிய படம் !

Published

on

ஆர்யா நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் டெடி இப்படத்தில் ஜோடியாக இவரது மனைவி நடிகை சாயிஷா நடித்திருந்தார். இப்படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. இதனை தொடர்ந்து ஆர்யா விஷாலுக்கு வில்லனாக எனிமி என்ற படத்தில் நடித்துவருகிறார்.

இயக்குநர் பா.தயாரிப்பில் சார்பட்டா பரம்பரை என்ற படத்திலும் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் இப்படம் திரையரங்கில் வெளியாகும்.

இந்நிலையில் ஆர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஸ்டியோ க்ரீன் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கவுள்ளாராம்.

விரைவில் இது குறித்த அதிகார்வபூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version