Connect with us
 

News

மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம் !

Published

on

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அதன் இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தை திட்டமிட்டிருந்தார்.

அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வந்தது இப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கவிருந்தார். ஆனால் தற்போது பா.ரஞ்சித் சில படங்களை தயாரித்து வருகிறார். இதனால் இந்த படத்தை தயாரிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் தனுஷ் மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தினை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தினை மாரி செல்வராஜ் இயக்க போவதாக கூறப்படுகிறது.