Reviews

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் – விமர்சனம் !

Published

on

Cast: Pavish, Anikha Surendran, Priya Prakash Varrier, Matthew Thomas, Venkatesh Menon, Rabiya Khatoon, Ramya Ranganathan, Siddharth Shankar
Production: Wunderbar Films Pvt Ltd
Director: Dhanush
Cinematography: Leon Britto
Editing: G.K Prasanna
Music: GV Prakash Kumar
Language: Tamil
Runtime: 2Hrs 11Mins
Release Date: 21 Febuary 2025

நடிகர் தனுஷ் இயக்கத்தில் பவர் பாண்டி, ராயன் படத்தை தொடர்ந்து தற்போது தனுஷ் இயக்கத்தில் வெளியாகியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (NEEK) திரைப்படம் கலகலப்பான ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகியுள்ளது. மேலும் தனுஷ் குரலில் லவ் ஃபெய்லியர் பாடலுடன் தொடங்கும் படத்தில் பார்வையாளர்களை பெரிதளவில் குழப்பும் கதையாக இல்லாமல் இது ஒரு வழக்கமான காதல் கதை தான் என்றே டைட்டில் கார்டில் இயக்குநர் தனுஷ் தெரிவித்துவிடுகிறார்.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இளம் நடிகர்கள் பவிஷ், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன், ராபியா காத்தூன், ரம்யா ரங்கநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சீனியர் நடிகர்கள் சரத்குமார், சரண்யா பொன்வன்னன், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதை களம்

நடிகர் தனுஷ் ஏற்கனவே சொன்னது போல ஒரு வழக்கமான காதல் கதை நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். கதையின் நாயகன் பிரபு காதல் தோல்வியில் சூப் பாயாக திரிகிறான். அவனை இதில் இருந்து வெளியில் கொண்டு வர ஒரு பெண்ணை திருமணம் செய்துவைக்க முடிவு செய்கிறார்கள் அவனது பெற்றோர்கள். அரை மனதாக பெண் பார்க்க செல்லும் பிரபு சந்திப்பது தனது ஸ்கூல் மேட் பிரியா பிரகாஷ் வாரியரை.

இருவரும் கொஞ்ச நாள் பேசி பழகிய பின் கல்யாணம் பண்ணிக்கலாமா வேண்டாமா என்கிற முடிவுக்கு வர திட்டமிடுகிறார்கள். சரியாக திருமணத்திற்கு ஓக்கே சொல்ல இருக்கும் நேரத்தில் அவனது எக்ஸ் நிலா (அனிகா சுரேந்தர்) திருமண பத்திரிக்கை அவனுக்கு வந்து சேர்கிறது. ஃபிளாஷ்பேக் செஃப் ஆக வேண்டும் என்கிற கனவில் இருக்கும் பிரபுவும் பெரிய பணக்கார வீட்டு பெண்ணான நிலாவும் சந்தித்து கொள்கிறார்கள். அதான் நாயகன் செஃப் ஆச்சே.

சமைத்து கொடுத்த ஹீரோயினை இம்பிரச் செய்கிறான். இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. பிரபுவின் வீட்டில் கிரீன் சிக்னல் தருகிறார்கள். ஆனால் நிலாவின் அப்பாவாக வரும் சரத்குமார் ரெட் சிக்னல் போடுகிறார். பிரபுவும் நிலாவும் எதனால் பிரிந்தார்கள் ? இருவரும் மறுபடியும் சேர்ந்தர்களா ? அல்லது பிரபு தனது வீட்டில் பார்த்த பெண்ணையே திருமணம் செய்துகொண்டாரா என்பதே படத்தின் மீதி கதை.

படம் எப்படி இருக்கிறது தனுஷின் அக்கா பையன் பவிஷ் இது அவருக்கு முதல் படம் போல் தெரியவில்லை மிக சிறந்த நடிப்பை வெளிபடுதியுள்ளார் . டான்ஸ் ,வசனம் சொல்லுவது எல்லாம் அருமையாக நடித்துயுள்ளார் . இதை தொடர்ந்து பவிஷ்க்கு நண்பனாக வரும் மேத்யூ தாமஸ் மிக சிறந்த காமெடி நடிப்பை வெளிபடுதியுள்ளார்.

பவிஷ் மற்றும் மேத்யூ தாமஸ் இருவரும் வரும் காட்சி திரையாராகமே சிரிப்பாக இருக்கும். மத்யு தவமோஸின் தனது நகச்சுவை முலம் படத்தின் 2 ஆம் பாதியில் மிக சிறப்பாக அமைந்தது மேலும் மற்ற நடிகர்கள் ஆணிக்கி , வெங்கட்,ராபியா மற்றும் ரம்யா ஆகியோரின் நடிப்பு அருமையக்க இருக்கிறது. மேலும் பவிஷ் மற்றும் அணிக்க வரும் காதல் காட்சி இளைஞர்களை கவரும் வகையில் இருக்கிறது. இதை தொடந்து ஆடுகளம் நேரன் ,சரத்குமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் மிக சிறப்பான நடிப்பை வெளிபடுதியுள்ளார்கள்.

தனுஷின் திரைக்கதை மற்றும் இயக்கம் மிக அருமையாக இயக்கியுள்ளார் . மேலும் இந்த படத்தின் ஒலிபதிவு மற்றும் இசையாமைபாளர் ஜி வி பிரகாஷ் குமாரின் இசை இப்படத்துக்கு மிக பெரிய பலம்.

பிளஸ்
தனுஷ் கதை மற்றும் திரைக்கதை , பவிஷ் , மேத்யூ தாமஸ். ஜி வி பிரகாஷ் குமாரின் இசை.

மைனஸ்
ஓரு சில இடங்களில் லிப் சிங்க சிறப்பாக இல்லை

மொத்ததில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ – Genz காதலர்கள் கொண்டாடும் வெற்றி படம்.

 

RATING 4.5/5

 

Trending

Exit mobile version