Reviews
நிறம் மாறும் உலகில் – திரைவிமர்சனம் !

Cast: Bharathiraja, Rio Raj, Natty Natraj, Sandy Master, Yogi Babu, Vigneshkanth, Rishikanth, Aegan, Kaniha, Vadivukarasi,
Production: L Catherine Shoba & Lenin
Director: Britto JB
Screenplay: Britto JB
Cinematography: Mallika Arjun, Manikanda Raja
Editing: Tamil Arasan
Music:
Language: Tamil
Runtime: 2H 26Mins
Release Date: 7 March 2025
4 வெவ்வேறு கதைகள் சொல்லி அதில் உள்ள ஆழமான பாச போராட்டத்தை சொல்லி இருக்கிறார் இயக்குநர். ஒரு ஒரு கதையும் நம்மை ஆழமாக சித்தித்து அழ வைக்கிறது இந்த நிறம் மாறும் உலகில் படம்.
நண்பர்கள் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தியதாக கூறி, தனது தாய் விஜி சந்திரசேகரிடம் கோபித்துக் கொண்டு தனது நண்பி வீட்டிற்குச் செல்கிறார் லவ்லின் சந்திரசேகர்.தனது ரெயில் பயணத்தில் டிடிஆர்’ஆக வரும் யோகிபாபுவை சந்திக்கிறார் லவ்லின். இருவரும் பேசிக் கொள்ள, தாயின் அருமை என்னவென்று தெரிந்து கொள்ள நான்கு உண்மைச் சம்பவங்களை லவ்லினிடம் கூறுகிறார் நடிகர் யோகிபாபு.
கதை களம்
கதை 1
நடிகர் நாட்டி நடராஜன் தமிழ்நாட்டில் இருந்து சென்று மும்பையில் மிகப்பெரும் தாதாவாக உருவெடுத்து நிற்கிறார் நட்டி. சிறுவயதில் தனது தாய் பாலியல் தொழில் செய்து தன்னை வளர்த்ததையும், தாயின் அன்பு இப்போது கிடைக்கவில்லையே என்றும் தினம் தினம் ஏங்குபவராக வருகிறார் நட்டி. தனது மகனைக் கொன்ற நட்டியை எப்படியாவது கொல்லை வேண்டுமென்று வெறிகொண்டு அவரை தேடி வருகிறார் மற்றொரு ரெளடியான சுரேஷ் மேனன்.
கிராமத்திலிருந்து வாய் பேசமுடியாத தனது காதலியை இழுத்துக் கொண்டு மும்பைக்கு வந்துவிடுகிறார் ரிஷிகாந்த். இவர், எதேச்சையாக சுரேஷ் மேனன் கேங்’கில் சிக்கிக் கொள்கிறார். நட்டியைக் கொல்ல ரிஷிகாந்தை பயன்படுத்துகின்றனர். அதன்பிறகு என்ன நடந்தது என்பதே இக்கதையின் மீதிக் கதை.
கதை 2
கிராமத்தில் பாரதிராஜாவும் வடிவுக்கரசியும் கணவன் மனைவி. இரண்டு மகன்களை பெற்றெடுத்தவர்கள். மாதம் 1 ஆம் தேதி ஆனால், மகன்கள் அனுப்பும் காசுக்காக தபால் நிலையத்தில் காத்திருக்கும் எளிமையான பெற்றோர்கள்.ஆனால், மகன்கள் இருவரோ பெற்றோர்கள் மீது பாசமில்லாமல் பேசுகின்றனர். அதுமட்டுமல்லாமல் அவர்களை துளியளவிற்கும் மரியாதை கொடுக்காமல் இருக்கின்றனர்.
ஆனால், பாரதிராஜாவும் வடிவுக்கரசியும் ஒருவருக்கொருவர் அளவு கடந்த காதலில் இருக்கின்றனர். இவர்களின் வாழ்க்கையில் அடுத்து என்ன நடந்தது என்பதே இக்கதையின் மீதிக் கதை.
கதை 3
நடிகர் ரியோ ராஜ் மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவர் , சிறுவயதிலேயே தனது தந்தையை இழந்துவிட்டதால், தாய் ஆதிரா தான் உலகமென வாழ்ந்து வருகிறார் ரியோ. மகனை கலெக்டராக பார்க்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார் ஆதிரா. இவரது நண்பனாக வருகிறார் விக்னேஷ்காந்த். திடீரென ஆதிரா, மயக்கம் போட்டு கீழே விழ, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கேன்சர் இருப்பதாகவும், மருத்துவம் பார்க்க பல லட்சம் செலவாகும் எனவும் கூறிவிடுகின்றனர்.
என்னசெய்வதென்று தெரியாது அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் ரியோ, தனது தாயை காப்பாற்ற வேண்டும் என்று பணத்திற்காக ஓடுகிறார். தாயின் லட்சியமா அல்லது தாயின் உயிரா இரண்டில் எதை ரியோ கையில் எடுத்தார் என்பதே இக்கதையின் மீதிக் கதை.
கதை 4
தனது கணவனை இழந்து ஒரு வருடம் ஆன நிலையில், மகன் மற்றும் மருமகள் இருவரால் முதியோர் இல்லத்திற்கு அனுப்பப்படுகிறார் நடிகை துளசி. ஒருநாள், முதியோர் இல்லத்திலிருந்து வெளியே வந்த துளசி, பெற்றோர் யாருமில்லாத துணைக்கு யாரும் இல்லாத தனி ஒருவனாய் தனது வாழ்க்கையை ஆட்டோ ஓட்டி பார்த்துக் கொள்ளும் சாண்டியின் ஆட்டோவில் ஏறுகிறார் துளசி. யாரும் இல்லாதவர்களாய் இருக்கும் இவர்கள், ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் போது இவர்களின் வாழ்க்கையில் அடுத்து என்ன நடந்தது என்பதே இக்கதையின் மீதிக் கதை.
படம் எப்படி இருக்கு
இப்பத்தில் வரும் நான்கு கதைகளிலும் பெற்றோர்கள், அதிலும் அம்மா நம் வாழ்க்கையில் எந்த அளவிற்கு முக்கியமானவர்கள் என்பதை மிகவும் உயிரோட்டமாக கூறியிருக்கிறார் இயக்குனர்.
இப்பத்தில் வரும் நான்கு கதைகளிலும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களின் கதாபாத்திரத்தின் பலத்தை உணர்ந்து நன்றாகவே அக்கதாபாத்திரத்தை பூர்த்தி செய்து நடித்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்கள்.குறிபாக அதிலும் சொல்ல வேண்டுமென்றால் நாட்டி நடராஜன் ,ரியோ ராஜ் ,சண்டி பாரதிராஜா & வடிவுக்கரசி அழகிய காவியம் போல நம்மை பெரிதும் வருடும் வண்ணம் அக்கதாபாத்திரத்திரத்தை மிக அழகாக காட்டியிருக்கிறார் இயக்குனர். இவர்களின் இளமை கதாபாத்திரமாக நடித்த இருவருமே அழகு தான்.
மேலும் இக்கதையின் மிக பெரிய பலம் இசை.
மேலும் மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா இருவரின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. வெளிச்சத்தை அளவாக கொடுத்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்கள் இருவரும்.
இயக்குனர் பிரிட்டோ இப்படத்தில் தாய் மீது வைத்திருக்கும் பாசத்திற்கு எல்லை என்பது கிடையாது என்ற கருத்தை மிகவும் அழுத்தமாகவும் ஆழமாகவும் நான்கு கதை மூலம் வெளிப்படுத்தியிருக்கும் இயக்குனர் பிரிட்டோவிற்கு ஆகப்பெரும் வாழ்த்துகள்.மேலும் ஒவ்வொரு கதையிலும் தனது உயிரோட்டத்தைக் கொடுத்து படம் பார்ப்பவர்களின் கண்களில் வந்த கண்ணீரை தனது வெற்றியாக்கிக் கொண்டார் இயக்குனர் பிரிட்டோ.
பிளஸ்
நடிகர் நாட்டி நடராஜன் ,ரியோ ராஜ் ,சண்டி பாரதிராஜா & வடிவுக்கரசி மேலும் கதை மற்றும் திரைக்கதை.
மைனஸ்
3 ஆம் கதை களம் சிறிது மெதுவாக இருக்கிறது
மொத்தத்தில் ‘நிறம் மாறும் உலகில்’ – உணர்வுபூர்வமான மிக சிறந்த படைப்பு.
Rating 3.25/5