Connect with us
 

News

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து சொல்ல ஒன்றும் இல்லை – நடிகை ஆண்ட்ரியா !

Published

on

நடிகை ஆண்ட்ரியா படங்களில் நடிப்பதை தாண்டி இசைக் கச்சேரிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. தற்போது இவர் கோபி நயினாரின் மனுசி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று சென்னையில் ஒரு கடை திறைப்பு விழாவுக்கு வருகை தந்திருந்த ஆண்ட்ரியாவிடம் மலையாள சினிமாத்துறையில் நடந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்த நீதிபதி ஹேமா அறிக்கையைக் குறிப்பிட்டு கேள்வி பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்க அதற்கு ஆண்ட்ரியா நோ கமெண்ட்ஸ் என்னிடம் அதை பற்றி எதுவும் கேட்க வேண்டாம் என பதிலளித்தார்.