News
அக்டோபர் 13 பீஸ்ட் படத்தின் கதாநாயகி போஸ்டர் வெளியீடு !

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட் இப்படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த வாரம் டெல்லி சென்ற படக்குழு அங்கு படப்பிடிப்பை முடித்து விட்டு தற்போது மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளது. தற்போது விஜய் – பூஜா ஹெக்டே காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறாம்.
இதனையடுத்து படத்தின் இருதிக்கட்டமாக விரைவில் ரஷ்யா செல்லப்போகிறதாம் படக்குழு. அங்கு விஜய் மற்றும் வில்லன் மோதும் அதிரடிக்காட்சி உள்பட மேலும் சில காட்சிகள் படமாக்கபடவுள்ளதாம்.
பீஸ்ட் படம் பொங்களுக்கு வெளியாகவுள்ள நிலையில் இந்த மாதம் 13-ம் தேதி இப்படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே பிறந்தநாள் கண்டிப்பாக அன்றைய தினத்தில் அவரது போஸ்டர் வெளியாகும். அதனையடுத்து ஆயுத பூஜை 14 மற்றும் 15 தேதிகள் பீஸ்ட் படத்தின் முக்கியமான அப்டேட்கள் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.