News
தனுஷுக்கு ஜோடியாக 3 கதாநாயகிகள் அதிகாரபூர்வ அறிவிப்பு !

நடிகர் தனுஷ் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை படம் என்றால் யாரடி நீ மோகினி இப்படத்தை இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கினார். இப்படத்தை தொடர்ந்து குட்டி, உத்தம புத்திரன் என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்தார். தற்போது மிக நீண்ட ஒரு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தனுஷுடன் இணைந்து ஒரு படம் இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு 6 வருடங்கள் கழித்து அனிருத் மற்றும் தனுஷ் இப்படத்தில் மீண்டும் இணைகிறார்கள்.
இந்நிலையில் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக 3 கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளாது. விரைவில் அந்த நடிகைகளின் பெயர்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிவரும் டி 43 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடிக்கவுள்ளார். அதன் பின்னர்தான் இப்படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.