Connect with us
 

News

தளபதி 66 படத்தில் இணையும் ராஷ்மிகா மந்தனா அதிகாரபூர்வ அறிவிப்பு !

Published

on

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் தளபதி நடிக்கவிதுக்கும் திரைப்படம் தளபதி 66.

தளபதி 66 படத்தின் இசையமைப்பாளர் தமன் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதற்கான பாடல்களை கம்போஸ் செய்ய ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது.

தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு இந்த வாரத்தில் ஆரம்பிக்கவுள்ள நிலையில் நடிகை யார் என்ற அறிவிப்பு வெளிவராமலே இருந்தது. ஆனாலும் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது ஆனாலும் படக்குழு இதை அறிவிக்காமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடிக்கும் 66-வது திரைப்படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா என்று இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். ராஷ்மிகாவின் பிறந்த நாளான இன்று இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்களும் ராஷ்மிகா ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.