Connect with us
 

News

சுதா கொங்கராவின் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு !

Published

on

இயக்குநர் சுதா கொங்காரா இறுதிச்சுற்று மற்றும் சூரரைப்போற்று ஆகிய தொடர் வெற்றி படங்களை இயக்கியவர் தற்போது சுதா கொங்காராவின் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் கன்னட நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப் மற்றும் கே.ஜி.எப் சாப்டர் 2 ஆகிய படங்களை இயக்கிய Hombale Films நிறுவனம்தான் சுதா கொங்காரா இயக்கும் அடுத்த படத்தை தயாரிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் இப்படத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் தொழிநுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதைக்களம் என்று கூறப்படுகிறது.