Connect with us
 

News

மகான் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு !

Published

on

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘மகான்’ . இந்த படத்துக்கு ரசிகர்களுடையே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தில் வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லலி குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இசையமைப்பாளார் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்துமே முடிவடைந்து வெளியீட்டுக்காக காத்திருந்தது.

இந்த நிலையில் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடாமல் நேரடியாக அமேசான் ஓ.டி.டி. தளத்தில் அடுத்த மாதம் 10-ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ரசிகர்கள் மத்தியில் இப்படம் எங்கு வெளியாகும் என்ற கேள்வி இருந்த நிலையில் இன்று அது தெளிவானது. இப்படம் ஆரம்பம் முதலே ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற பேச்சு இருந்து வந்தது என்பதை குறிப்பிடத்தக்கது.