News
ஓ மை டாக் குழந்தைகளுக்கான முழு நீள திரைப்படம் – அருண் விஜய் !

இயக்குநர் சண்முகம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘ஓ மை டாக். 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் அருண் விஜய் மற்றும் மகன் அர்னவ் அருண் விஜய், விஜயகுமார், மஹிமா நம்பியார் மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைபடம் ஏப்ரல் 21-ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இப்படம் பற்றி அருண் விஜய் கூறும் போது இத்திரைப்படம் சிறு குழந்தைக்கும் அவரின் செல்ல நாயான சிம்பாவுக்கு இடையே உள்ள தனித்துவமான நட்பு மற்றும் அழகான தருணங்களை சொல்லும் திரைப்படம்.
இத்திரைப்படத்தின் கதையை கேட்டபோது வித்தியாசமான திரைக்கதை என்று உணர்த்தேன். குழந்தைகளுக்கும் செல்ல பிராணிக்கும் இடையே உள்ள உணர்வுபூர்வமான பந்தத்தை மையப்படுத்தி இருந்தது.
குறிப்பாக தந்தையும் மகனும் இடையே உள்ள திரைக்கதையில் அழகாக இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநீள குழந்தைகள் படமாக இப்படம் இருக்கும் என்று நம்புகிறேன். இப்படத்தில் என் மகன் அர்னவ் நடித்தது மிகவும் அதிஷ்டம் என்றே நான் நம்புகிறேன் என்று கூறினார்.