ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் ஊட்டியில் வசித்து வருகிறார் அருண் விஜய், மனைவி மஹிமா நம்பியார் இவர்களின் மகண் ஆர்னவ் விஜய் மற்றும் அப்பா விஜயகுமார்.
படத்தில் வில்லனாக வரும் வினய் கண் பார்வ்வையற்ற ஒரு நாயை கொலை செய்ய சொல்லி இருவரிடம் கொடுத்து விட சொல்கிறார். அப்போது அது அவர்களிடமிருந்து தப்பித்து ஆர்னவ் விஜய்யிடம் வந்து சேர்கிறது. அதை வீட்டுக்கு தெரியாமல் எடுத்து வளர்க்கும் ஆர்னவ் விஜய் அதற்கு சிம்பா என பெயரும் வைக்கிறார்.
ஆர்னவின் சிறப்பான பயிற்சியால் நல்ல திறமையுடன் வளர்கிறது. ஒரு வழியாக பார்வையை வரவைத்து நாய் கண்காட்சியில் கலந்து கொள்ள வைக்கிறார்.தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ளப் போகும் போது மிகவும் பணக்காரரான வினய் தான் வாங்கும் அந்த பட்டத்தை மீண்டும் வெள்வதற்காக ஆர்னவ் விஜய்யின் சிம்பாவிற்கு சில பிரச்சினைகளை கொடுக்கிறார் அதை மீற் சிம்பா வெற்றி பெற்று அந்த கோப்பையை வென்றதா இல்லையா என்பதுதான் மீதிக்கதை.
ஆர்னவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுக படம் உண்மையாக இது அறிமுக படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு நடித்திருக்கிறார். கலை குடும்பத்தின் வாரிசு என்பதை திரையில் நிரூபித்துள்ளார்.
அப்பா வேடத்தில் வரும் அருண் விஜய் பெரிதாக முக்கியத்துவம் இல்லாத கதாப்பாத்திரம். தன் மகன் அறிமுக படம் என்பதால் ஒரு அப்பாவாக நடித்துள்ளார்.அம்மாவாக வரும் மஹிமா நம்பியார் பெரிதாக சொல்லும் அளவிற்கு முக்கியத்துவம் இல்லை.
கிடைத்த இடங்களில் அம்மாவாக முத்திரை பதிக்கிறார். ஆர்னவ் தாத்தாவாக வரும் விஜயகுமார் ஒரு நடுத்தர குடும்பத்தில் ஒரு தாத்தாக எப்படி இருப்பாரோ அப்படி வந்து நம்மை ரசிக்க வைக்கிறார்.
சிறு குழந்தைக்கு வரும் கோபம், பாசம், அடம் பிடிக்கும் குணம் என அனைத்தையும் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார் ஆர்னவ் விஜய்.
Cinetimee
குழந்தைகள் படம் என்பதால் அதற்கு ஏற்ற போல பணக்கார வில்லனாக வரும் வினய். குழந்தைகள் படம் என்பதால் கோமாளி இரண்டு எடுபுடி வில்லன்கள் என ரசிக்க வைக்கிறது.
இசையமைப்பாளார் நிவாஸ் கே.பிரசன்னாவின் இசைதில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. கோபிநாத்தின் ஒளிப்பதிவு ஊட்டியின் அழகை இரட்டிப்பாக காட்டியுள்ளது. படத்திற்கு என்ன தேவையோ அதை மிக அழகாக கொடுத்துள்ளார் எடிட்டர் மேகநாதன்.
நம்பிக்கை என்ற ஒன்று நம் வாழ்க்கையில் வைத்தால் நாம் நினைக்கும் எதையும் சாதித்து காட்டலாம் என்பதை கண் பார்வையற்ற சிம்பா மற்றும் ஆர்னவ் மூலம் நமக்கும் குழந்தைகளுக்கும் நாய் பிரியர்களுக்கு மிகவும் அழுத்தமாக கூறியுள்ளார் இயக்குநர் வாழ்த்துக்கள்.