Connect with us
 

News

வீட்ல விசேஷம் படத்தில் பழைய சத்யராஜை பார்க்கலாம் – ஆர்.ஜே.பாலாஜி !

Published

on

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் ஜூன் 17-ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் Veetla Vishesham இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய பாலாஜி.நான் இரண்டு, மூன்று வருடங்களாக காத்திருந்த மேடை இது. ஊர்வசி மேடம் இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர். அவர் தொழில்நுட்பம், எதிரில் நடிப்பவர்கள், கதை எல்லாவற்றையும் மனதில் வைத்து நடிப்பை வெளிப்படுத்துபவர்.

அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி இந்த படத்தில் ஆடியோ வெளியீட்டுற்கு வந்த அனைவருக்கும் படக்குழு சார்பாக நன்றிகள். இந்தியில் பல வெற்றிகளை கொடுத்துவிட்டு, தமிழில் அஜித்குமார் போன்ற பெரிய நடிகர்களை வைத்து தயாரித்துவிட்டு, என்னை வைத்து படம் எடுப்பது மகிழ்ச்சி. அவருடன் தயாரிப்பாளர் ராகுல் உடைய உழைப்பு அளப்பறியது.

இயக்குனர் சரவணன் தான் இந்த படத்தின் முதுகெலும்பு. எங்களுடைய புரிதல் தான் எங்களை இரண்டு படங்களை உருவாக்கவைத்தது. அவர் என்னை பல இடங்களில் தாங்கிபிடித்துள்ளார். நான் தூரத்தில் இருந்து பார்த்த இந்திய சினிமாவின் சிறந்த நடிகர் சத்யராஜ் சாரை இயக்கியது எனக்கு சந்தோசம். அவர் நாம் கேட்பதை அப்படியே கொடுப்பார். தயாரிப்பு நிறுவனத்தில் உள்ள அனைவரும் இந்த படத்தில் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். பா விஜய் சார் பாடலை ஒரே இரவில் எழுதி கொடுப்பவர்.

அவர் இப்போது வரை என் எல்லா படத்திலும் பாட்டு எழுதுகிறார். மக்கள் மனதில் அதிக நாள் நிற்க கூடிய பாடலை நாங்கள் உருவாக்க விரும்பினோம். கிரிஷ் அப்படிப்பட்ட பாடல்களை கொடுத்துள்ளார். சர்பட்டா, கர்ணன் போன்ற படங்களில் படதொகுப்பாளர் செல்வா, அவர் என் படத்தில் தொடர்ந்து பணியாற்றிவருகிறார். இந்த படம் பலரின் முயற்சியில் உருவாகியுள்ளது. வீட்ல விசேஷம், குடும்பத்தோடு தியேட்டரில் பார்க்கும் படமாக இருக்கும்.