News

வைரமுத்துவிக்கு வழங்கவிருந்த ஓ.என்.வி குறித்து மறுபரிசீலனை !

Published

on

மலையாளத்தில் மிகப்பெரிய கவிஞர்களுள் ஒருவர ஓ.என்.வி. குறுப் இவர் பெற்ற விருது ஞானபீட விருது. இவரின் பெயரால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது. ஓ.என்.வி.இலக்கிய விருது. மூத்த திறைமையான படைப்பாளிகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்த விருதினை கவிப்பேரசு கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு இந்த விருது கொடுக்க தேர்வு செய்யப்பட்டார்.

முதன் முறையாக மளையாளி இல்லாத ஒரு தமிழ் இலக்கியவாதிக்கு இந்த விருது வழங்குப்படுகிறது. இந்த விருது வைரமுத்துவிற்கு கொடுப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார் நடிகை பார்வதி. இவர் பூ, தனுஷ் நடித்த மரியான் ஆகிய படங்களின் நாயகியாக நடித்தவர்.

ஓ.என்.வி.சார் எங்களின் பெருமை ஒரு கவிஞராகவும் சிறந்த பாடலாசிரியராகவும் அவரது பங்களிப்பு ஈடு இணையற்து. பாலியல் புகார்கள் பல சர்ச்சைக்குரிய ஒன்றில் சம்மந்தப்பட்ட ஒருவருக்கு அவரின் பெயரால் வழங்கும் ஒரு விருதினை வழங்குவது பெரும் அவமரியாதைக்குரிய ஒன்றாகும் என்று தெரிவித்துள்ளார் பார்வதி.

இந்நிலையில் ஓ.என்.வி கலாச்சார அகாடமி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், விருதுகள் குழுவின் பரிந்துரையின்படி இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருக்கும் ஓ.என்.வி இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம் என ஓ.என்.வி கலாச்சார அகாடமி தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version