Reviews

ஒரு நொடி – திரைவிமர்சனம் !

Published

on

Cast: Taman Kumar, Vela. Ramamoorthy, M.S.Bhaskar, Nikitha, Sri Ranjini
Production: Madurai Azhagar Movies & White Lamp Pictures
Director: B.Manivarman
Cinematography: K.G.Ratheesh
Editing: S.Gurusuriya
Music: Sanjay Manickam
Language: Tamil
Runtime: 2Hours 8Mins
Release Date: 26 April 2024

 

இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் ஒரு க்ரைம் திரில்லர் படமாக இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ஒரு நொடி.

மதுரையிலுள்ள அலங்காநல்லூரில் ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார் எம்.எஸ்.பாஸ்கர் மகளின் திருமணத்திற்காக வாங்கிய கடனை குறித்த நேரத்தில் கட்ட முடியாமல் போக எம்.எஸ்.பாஸ்கரிடம் உள்ள இடத்தை அடித்து பறித்து கொள்கிறார் கந்துவெட்டி வேல ராமமூர்த்தி. 6 மாதத்துக்குள் வாங்கிய பணத்தை கொடுத்து விட்டு பத்திரத்தை மீட்டுக்கொள்ளுமாறு சொல்கிறார் வேல ராமமூர்த்தி. பணத்தை ரெடி செய்து விட்டு பத்திரத்தை மீட்க செல்லும் எம்.எஸ்.பாஸ்கர் காணாமல் போக இது பற்றிய விசாரணையை இன்ஸ்பெக்டர் தமன்குமார் நடத்த ஆரம்பிக்கிறார். சந்தேகத்தின் பெயரில் வேல ராமமூர்த்தியை கைதும் செய்கிறார். இது ஒரு புறம் இருக்க இளம் பெண் ஒருவரும் கொலை செய்யப்படுகிறார். அடுத்தடுத்து நடக்கும் இந்த இரண்டு கொலைகளின் விசாரணையில் நாம் எதிர்பார்க்காத திருப்பங்கள் நடக்கிறது. இந்த இரண்டு கொலைகளையும் செய்த குற்றவாளி யார் அதை எப்படி இன்ஸ்பெக்டர் தமன்குமார் கண்டு பிடித்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாகவும் இன்ஸ்பெக்டர் வேடத்திலும் மிடுக்காக நடித்திருக்கிறார் நாயகன் தமன்குமார். என்றுமே நேர்மையான அதிகாரியாக இருக்க வேண்டும் என நினைக்கும் தமன்குமார் உள்ளூர் எம்.எல்.ஏ.மிரட்டலுக்கும் ரவுடி வேலராமமூர்த்தி மிரட்டலுக்கும் அடிபணியாமல் இருக்கும் போலீஸ் அதிகாரியா மிரட்டலா ஒரு நடிப்பை கொடுத்துள்ளார்.

நாயகி என்று படத்தில் யாரும் இல்லை. சில பெண் கதாப்பாத்திரங்கள் படத்திற்கு முக்கியமாக வந்து போகிறது. எம்.எஸ்.பாஸ்கர் மனைவியாக வரும் ஸ்ரீ ரஞ்சனி, கொலை செய்யப்படும் இளம் பெண்ணாக நிகிதா, அவரின் அம்மாவாக வரும் தீபா சங்கர் என நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர்.

வில்லனாக வரும் வேல ராமமூர்த்தி வழக்கம் போல திமிரான பேச்சிலேயே மிரட்டுகிறார். எம்.எல்.ஏவாக நடித்திருக்கும் பழ.கருப்பையா நடிப்பு சொல்லும்படி இல்லை.

சஞ்சய் மணிகண்டன் இசையும், ரத்தீஷ் ஒளிப்பதிவும் குரு சூர்யா படத்தொகுப்பும் பலமாக அமைந்துள்ளது படத்துக்கு.

படத்தின் முதல் பாதி தொடர்ந்து இரண்டு கொலை விசாரணை விறுவிறுப்பு என நகர்கிறது. இடைவேளைக்கு பின்னர் திரைக்கதையில் கொஞ்சம் தடுமாற்றம். படத்தில் நடக்கும் இரண்டு கொலைகளுக்கும் கண்டிப்பாக ஏதோ தொடர்பு இருக்கும் என நம்மால் ஈசியாக யூகிக்க முடிகிறது.

மொத்தத்தில் ‘ஒரு நொடி’ சமீபத்தில் வெளிவந்த த்ரில்லர் படங்களில் நினைவில் நிற்கும் படங்கள் சிலவே அதில் இதுவும் ஒன்று.

Rating : 3/5

 

Trending

Exit mobile version