News

ஜகமே தந்திரம் படத்தின் தோல்விக்கு பின்னர் பெரிய படங்களை வாங்க யோசிக்கும் ஓடிடி தளங்கள் !

Published

on

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் இந்த மாதம் 18-ம் தேதி நெல்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. வொய் நாட் ஸ்டுயோஸ் நிறுவனமும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்தது. தனுஷின் ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். பிரபல ஹாலிவுட் நடிகர் கேம்ஸ் காஸ்மோ வில்லனாக நடித்திருந்தார். இப்படத்தின் கதையின் நாயகனாக மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடித்திருந்தார்.

இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றுது. அதுமட்டுமில்லாமல் நெல்பிளிக்ஸ் தளத்துக்கும் இந்த படத்தால் பார்வையாளர்கள் எண்ணிக்கைக் கூடவில்லை எனவும் சொல்லப்படுகிறது. அதனால் இனிமேல் பெரிய நடிகர்கள் படங்களை நம்பி செல்லாமல் நல்ல கதையுள்ள படங்களை வாங்க ஓடிடி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாம்.

Trending

Exit mobile version