Reviews
படை தலைவன் – விமர்சனம் !

Cast: Shanmuga Pandiyan Vijayakant | Kashthuri Raja | Yamini Chander | Munishkanth | Karudan Ram | Rishi | A.Venkatesh | Yugi Sethu | Sreejith Ravi | Arul doss | Logu NPKS
Production: Jaganathan Paramasivam
Director: U.Anbu
Screenplay: U.Anbu
Cinematography: S.R.Sathish kumar
Editing: S.P.Ahamed
Music: Ilaiyaraaja
Language: Tamil
Runtime: 2H 16Mins
Release Date: 13 June 2025
ேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவான படை தலைவன் படம் இன்று தியேட்டரில் வெளியானது. அறிமுக இயக்குநர் அன்பு இயக்கியுள்ள இந்த படத்தில் யாழினி சந்திரன், கஸ்தூரி ராஜா, முனிஷ்காந்த், அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி, ஏ. வெங்கடேஷ், எஸ்.எஸ். ஸ்டான்லி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் தியேட்டரில் வெளியாகி உள்ள நிலையில், இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
கதை களம்
கதையின் நாயகன் யானை பயிற்றுவிப்பாளரான சண்முக பாண்டியன், ஒரு யானையை குட்டியிலிருந்து வளர்த்து வருகிறார். ‘மானியன்’ என்று பெயர் சூட்டப்பட்ட அந்த யானையை தன் பிள்ளையாக பாவித்து வளர்க்கிறார். இதற்கிடையில் ஊருக்குள் புதிதாக வரும் ஒரு கூட்டம், யானையை திருடிக் கொண்டு காட்டுக்குள் சென்று மறைகிறார்கள். இதற்கு சண்முக பாண்டியன் உறவினரும் துணை போகிறார். யானையை காணாமல் தவிக்கும் சண்முக பாண்டியன், தனது நண்பர்களுடன் யானையை தேடி காட்டுக்குள் செல்கிறார். இந்த பயணத்தில் பல்வேறு இடையூறுகளையும், சவால்களையும் அவர் எதிர்கொள்கிறார்.
அதேவேளை காட்டுக்குள் வன தேவதையை வழிபடும் மக்களை ஒரு கும்பல் மிரட்டி அடிபணிய வைத்திருப்பதை அறிகிறார். சுதந்திரம் இல்லாமல் துயரோடு வாழும் அந்த மக்களுக்கு அவர் விடுதலை பெற்று தந்தாரா? மகனாக கருதி வளர்த்த யானையை கண்டுபிடித்தாரா? கொள்ளை கூட்டம் யானையை திருடி சென்றது ஏன்? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.
படம் எப்படி இருக்கு
இப்படத்தில் சண்முக பாண்டியன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் பறந்து வந்து அடிப்பதும், காலால் பன்ச் கொடுப்பதும் மாஸ். குறிப்பாக பொட்டு வெச்ச தங்கக்குடம்’ பாட்டில் இவரின் ஆக்ஷன் சீக்குவன்ஸ் அதிரடி.
மேலும் நடிகை யாமினி சந்தர் அழகான கதாநாயகியாக மனதில் இடம் பெறுகிறார். இன்னும் அவரை பயன்படுத்தி இருக்கலாம் என்று குறிப்பிடத்தக்கது.
ஏ ஐ தொழில்நுட்பத்தில் இடம்பெறும் விஜயகாந்த் ஓரிரு காட்சிகளே வந்தாலும் சிலிர்க்க வைக்கிறார். அவருடன் வரும் யோகி பஞ்ச் வசனங்கள் பேசி ‘ரமணா’ படத்தை நினைவூட்டுகிறார்கள்.
மேலும் வில்லனாக வரும் கருடன் ராம், மிரட்டல் நடிப்பால் கவனிக்க வைக்கிறார்.
இதை தொடர்ந்து நடிகர்கள் முனிஷ்காந்த், வெங்கடேஷ், அருள் தாஸ், ஸ்ரீஜித் ரவி உள்ளிட்டோரம் தங்களது சிறப்பான முறையில் நடித்துள்ளார்கள்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல் மற்றும் பின்னணி இசையும் இப்படத்துக்கு மிக சிறப்பாக இருக்கிறது.
இயக்குனர் யு.அன்புவின் மிக பழைய கதைக்களம் என்றாலும் பரபரப்பான திரைக்கதை மற்றும் கிளைமேக்ஸ் சண்டை காட்சி அசர வைக்கிறது. ஆனால் பல இடங்களில் லாஜிக் மீறல்கள் குறித்து பார்ப்பது பலவீனம்.
மேலும் எஸ் ஆர் சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு படத்துக்கு மிக அருமையாக இருக்கிறது. குறிப்பாக யானைகள் வரும் காட்சிகள், அடர்ந்த காடுகளில் நடக்கும் சண்டைக் காட்சிகளில் அவரது உழைப்பு மிக சிறப்பாக தெரிகிறது.
பிளஸ்
சண்முக பாண்டியன் மற்றும் வில்லன் கருடன் ராம் நடிப்பு, நடிகை யாமினி சந்தர் மற்றும் இளையராஜாவின் இசை
மைனஸ்
லாஜிக்கள் இல்லாத திரைக்கதை
படை தலைவன் – மக்கள் கொண்டாட்டம் படம்.
Rating [3/5]