Connect with us
 

News

படையப்பா, தேவர் மகன் படங்களை தவற விட்டது வருத்தம் அளிக்கிறது – மீனா !

Published

on

தமிழ் திரையுலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த மீன தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

எனக்கு வில்லி வேடத்தில் நடிக்க ஆர்வம்யுள்ளது. சினிமா பார்வையாளர்களின் மன நிலை தற்போது மாறியிருக்கிறது. முன்பெல்லாம் கதாபாத்திரம் தனது இமேஜூக்கு பொருத்தமாக இருக்குமா? என்று யோகிக்க வேண்டியிருந்தது.

ஆனால் இப்போது அப்படி இல்லை. நாம் நடிப்பது ஒரு கதாபாத்திரம் என்பதை மக்கள் புரிந்து கொண்டுயிருக்கிறார்கள். எனவேதான் எதிர்மறை கதாபாத்திரம் உள்ள வித்தியாசமான வேடங்களில் நடிக்க நான் விரும்புகிறேன்.

பல வெற்றி படங்களை காட்ஷீட் பிரச்சினையால் தவற விட்டுள்ளேன். அது எனக்கு இப்போது மிகப்பெரிய வருத்தம் அளிக்கிறது. படையப்பா, தேவர் மகன் படங்களையும் தவற விட்டுள்ளேன்.

அடைப்படையில் நான் ஒரு நடன கலைஞர். எனவே எனக்கு நடன காட்சிகளில் நடிக்க மிகவும் பிடிக்கும். பரதநாட்டிய கைதயம்சம் உள்ள படத்தில் நடிக்க எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனால் அது நிறைவேறவில்லை. எனக்கு காதல் கதையம்சம் உள்ள படங்கள் மிகவும் பிடிக்கும் என்று கூறினார் நடிகை மீனா.