Connect with us
 

Reviews

பரமசிவன் பாத்திமா – திரைவிமர்சனம் !

Published

on

Cast: Vemal, Chaya devi
Production: Lakshmi Creations
Director: Esakki Karvannan
Cinematography: M.Sukumar
Editing: Buvan
Music: Deepan Chakravarthy
Language: Tamil
Runtime: 2H 23Mins
Release Date: 6 June 2025

கதை களம்

மலைப்பாங்கான இடத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் என்ற ஊரில் வெள்ளைக்காரர்கள் வந்தபோது வேலை வாய்ப்பு, வசதி இவற்றைக் கொடுப்பதன் மூலம் கிறிஸ்தவ மதத்தை பரப்ப , ஒரு பக்கம் கிறிஸ்தவத்துக்கு மாறியவர்கள் ஊரின் ஒரு பகுதியை யாக்கோபுரம் என்று மாற்றிக் கொள்கின்றனர். இன்னொரு பக்கம் முஸ்லிம்களாக மாறியவர்கள் சுல்தான்புரம் என்று மாற்றிக் கொள்கின்றனர்.

இப்படிப் பிரிந்தவர்களின் அண்ணன் குடும்பம் ஒரு மதம் , தங்கை குடும்பம் ஒரு மதம் என்று மாறிப் போக , அதன் பாதிப்புகளால் பகை வளர்கிறது .ஒரு நிலையில் எந்த ஊரில் கல்யாணம் நடந்தாலும் அவர்களை ஒரு முஸ்லிம் இளைஞன் (மனோஜ்குமார்) இந்துப் பெண்(சேஷ்விதா ராஜூ) ஆகியோரின் உதவியோடு பரமசிவன் என்பவனும் (விமல்) பாத்திமா என்ற பெண்ணும் தண்ணித் தொட்டியில் முக்கி முக்கி கொலை செய்கிறார்கள் .

ஏன் எதற்கு ? அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படம்.மீதி கதை

படம் எப்படி இருக்கு

சில மதங்கள் பணம் கொடுத்து மக்களை தங்கள் பக்கம் இழுக்கின்றன என்பதையும், அப்படி இழுக்கப்பட்ட பலர் பெயரளவில் மட்டுமே மதம் மாறியிருக்கிறார்களே தவிர மனதளவில் மாறவில்லை என்பதையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன்.

நடிகர் விமல் கதையின் நாயகனாக அல்லாமல் ஒரு கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் சாயா தேவியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள

மேலும் கிறிஸ்தவ தேவாலய பாதரியராக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் அவரது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணன் அதிகம் பேசுகிறார், அவர் வரும் காட்சிகள் பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது.

கூல் சுரேஷ், மனோஜ்குமார், ஆதிரா, சேஷ்விதா, ஸ்ரீரஞ்சனி, வி.ஆர்.விமல்ராஜ், மகேந்திரன், காதல் சுகுமார், ஆறு பாலா, வீரசமர், களவாணி கலை உள்ளிட்ட அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

சுகுமாரின் ஒளிப்பதிவு சற்று ஆறுதல் கொடுத்தாலும், இசை பெரிதாக படத்திற்கு ஒட்டவில்லை என்று தான் கூற வேண்டும்.

பிளஸ்
நடிகர்கள் நடிப்பு ,கதை

மைனஸ்
திரைக்கதை மற்றும் இசை

பரமசிவன் பாத்திமா – சில பல குறைகள் இருந்தாலும் ரசிக்கலாம்.

Rating [2.5/5]