Reviews
பரம் பொருள் – விமர்சனம் !
Cast: Amithash, R.Sarathkumar, Kashmira Pardeshi
Production: Kavi Creations
Director:C. Aravind Raj
Screenplay:C. Aravind Raj
Cinematography: S. Pandikumar
Editing: Nagooran Ramachandran
Music: Yuvan Shankar Raja
Language: Tamil
Runtime: 2 Hrs 26 Mins
Release Date: 01.09.2023
இந்தியாவில் மட்டும் அல்ல தமிழ் நாட்டிலும் சிலை கடத்தல் என்பது நடந்து வருகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் அரவிந்த்ராஜ்.
தன் தங்கை மருத்துவ செலவுக்காக ஒரு திருட்டு வேலையில் இறங்குகிறார் அமிதாஷ். அப்படி திருட போகும் போலீஸ் இன்ஸ்பெக்டரான சரத்குமார் வீட்டில் திருட செல்லும் போதும் வசமாக மாட்டிக்கொள்கிறார். ஒரு சிலை கடத்தும் குற்றவாளிம்தான் நான் வேலை செய்தேன் என அமிதாஷ் சரத்குமாரிடம் சொல்ல அப்படி என்றால் அவன் சிலை எதும் வைத்திருக்கிறானா என கேட்க அமிதாஷ் ஆமாம் என கூறி ஒரு சிலையை சரத்குமாரிடம் காட்டுகிறார். அதை இருவரும் விற்று பங்கு போட்டு கொள்ளலாம் என சரத்குமார் அமிதாஷ் இருவரும் ஒது திட்டத்திற்கு வருகிறார்கள். இவர்களிடம் இருக்கும் 1000 வருடம் பழமையான அந்த சிலையை விற்க போகும் போது உயிர் போகும் அளவுக்கு பிரச்சனைகள் வருகிறது அதிலிருந்து தப்பித்து அவர்கள் நினைத்ததை செய்து முடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
ஒரு சிலைக் கடத்தல் எப்படி நடக்கிறது என்பதில் ஆரம்பித்து பின்னர் அது எப்படி கை மாறுகிறது அது எப்படி பணமாக மாறுகிறது என்பதையும் எப்படி எப்படி எல்லாம் நம் நாட்டில் உள்ள சிலைகளை கடத்தி வெளிநாட்டிற்கு விற்பனை செய்கிறார்கள் என்பதை ஆர்ப்பாட்டம் இல்லாத க்ரைம் த்ரில்லர் படமாக கொடுத்துள்ளார் இயக்குநர்.
அமிதாஷ் மற்றும் சரத்குமார் இருவருமே படத்தை தங்களின் தோல்களில் தாங்கி செல்கிறார்கள். போர் தொழில் படத்தில் சரத்குமார் கதாப்பாத்திரம் எப்படி பேசப்பட்டதோ அப்படி இப்படத்தில் வெகுவாக பேசப்படும் அதில் எந்த சந்தேகமும் இல்லை. பணம் மட்டும்தான் என் வாழ்க்கை அதற்காக நான் என்ன வேணா செய்வேன் என இருக்கும் ஒரு இன்ஸ்பெக்டராக வில்லன் கதாப்பாத்திரத்தில் படம் முழுவதும் மிரட்டுகிறார்.
உயிருக்காக போராடும் தன் தங்கையின் மருத்துவ செலவுக்காகவும் சரத்குமாரிடம் திருடி மாட்டிக்கொண்டு அவரின் மிரட்டலுக்கு பயந்து சிலை கடத்தும் வேலைகளில் இறங்கும் அமிதாஷ் வளர்ந்து வரும் நடிகர் என்றாலும் இது போன்ற துணிச்சலான கதாப்பாத்திரத்தில் தைரியாம நடித்துள்ளார் வாழ்த்துக்கள். இந்த கதாப்பாத்திரகு கச்சிதமாக பொருந்தியுள்ளார். பாசம், நடனம், சண்டைக்காட்சிகள் என நடிப்பில் அசத்தியுள்ளார்.
படத்தில் ஒரு நாயகி வேண்டும் என்பதற்காக காஷ்மீரா பர்தேசியை தேர்வு செய்திருக்கிறார்கள். படத்தின் கதை ஓட்டத்துடன் இவரின் கதாப்பாத்திரம் அமைந்திருக்கிறது சிறப்பு.
யுவனின் பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பலம். பாடல்கள் பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை. பாண்டிகுமார் ஒளிப்பதிவு இரவு நேர காட்சிகளில் மிளிர வைக்கிறது.
மொத்தத்தில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஒர் தரமான டுவிஸ் படம் பார்க்க நினைக்கும் உங்களுக்கு இப்படம் சமர்ப்பனம்.