Teaser
வெளியானது ஜமா படத்தின் அதிகாரபூர்வ டீஸர் !

கூலாங்கல் படத்தை தயாரித்த லெர்ன் அண்ட் டெக் புரொடக்ஷன் நிறுவனம் தற்போது தயாரித்துள்ள திரைப்படம் ஜமா. நாயகனாக இப்படத்தை இயக்கி நடித்துள்ளார் பாரி இளவழகன் ஜோடியாக அம்மு அபிராமி நடிக்கிறார்.
இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஆக்ஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழ்நாட்டின் பாரம்பரிய அழகியல் கலாச்சராமான தெருக்கூத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இக்கதை முழுக்க முழுக்க அவர்களின் வாழ்வியலை மையப்படுத்தி திருவண்ணாமலையில் நடந்ததாக படமாக்கப்பட்டுள்ளது. அதிலும் தெருக்கூத்து நாடகத்தின் போது ஆண் கலைஞர்கள் பெண் வேடமிட்டு நடிப்பது உன்று அதனால் அந்த ஆண் கலைஞர்கள் அனுபவிக்கும் உணர்ச்சி மனதில் ஏற்படும் மாற்றம் அதை இந்த சமுதாயம் எப்படி எடுத்துக்கொள்கிறது. அதனால் அவர்களுக்கு இந்த சமுதாயத்தில் ஏற்படும் சவால்களை இப்படம் கூறுகிறது.