Reviews

பார்க்கிங் – திரைவிமர்சனம் !

Published

on

Cast: Harish Kalyan, Indhuja Ravichandran, M.S. Bhaskar, Rama, Prarthana
Production: Sudhan Sundaram & K.S. Sinish
Director: Ramkumar Balakrishnan
Screenplay: Ramkumar Balakrishnan
Cinematography: Jiju Sunny
Editing: Philomin Raj
Music: Sam C.S
Language: Tamil
Runtime: 2H 9Mins
Release Date: 1 December 2023

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பார்க்கிங்.

ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஹரிஷ் கல்யாண். திருமணமான பின்னர் மனைவியுடன் புதிதாக ஒரு விட்டின் மேல்மாடியில் வாடகைக்கு குடியேருகிறார். அங்கு கீழ் வீட்டில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார் அரசு ஊழியரான எம்.எஸ்.பாஸ்கர். ஆரம்பத்தில் இவர்களுக்கு நல்ல உறவு நிலவுகிறது. இந்த நிலையில்தான் தன் மனைவிக்காக புதிதாக ஒரு காரை வாங்குகிறார் ஹரிஷ் கல்யாண். இதிலிருந்து ஏழரை ஆரம்பிக்கிறது.

ஹரிஷ் கல்யாண் காரை பார்க்கிங்கில் நிறுத்துவதால் இவர்கள் இருவருக்கும் பிரச்சனை ஆரம்பிக்கிறது. ஹரிஷ் கல்யாண் காரை நிறுவத்துவதால் தன் வண்டியை நிறுத்த முடியாமல் போக அது கால போக்கில் பெரிய மோதலாக வெடிக்கிறது. அந்த மோதலின் உச்சமாக இருவரும் ஒருவருக்கொருவர் பல காரியங்கள் செய்கிறார்கள் இறுதியில் இவர்களுக்கும் ஏற்பட்ட அந்த பார்க்கிங் பிரச்சனை தீர்ந்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இறுதியாக வெளியான படத்தின் மிகப்பெரிய தோல்விக்கு இப்படத்தின் மூலம் மீண்டும் நல்ல ஒரு கம்பேக் கொடுத்துள்ளார். பெற்றோர்களின் பேச்சை மீறி திருமணம், கோபத்தில் வயதான எம்.எஸ்.பாஸ்கரை அடிப்பது, மனைவி இந்துஜாவிடம் கோபப்படுவது, எம்.எஸ்.பாஸ்கரை பிரச்சினையில் கோர்த்து விடுவது என பல இடங்களில் கவனிக்க வைக்கும் நடிப்பை கொடுத்துள்ளார் ஹரிஷ் கல்யாண்.

அடுத்து எம்.எஸ்.பாஸ்கர் படத்தின் மிகப்பெரிய பலம். இவரின் அனுபவ நடிப்பு நம்மை வியக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. வயதுள்ள ஒரு இளைஞனிடம் சரிக்கு சமமாக சண்டைக்கு போவது. தன்னை ஒரு பெரிய ஆள் என நிலைநிறுத்திக்கொள்ள இவர் செய்யும் சில காரியங்கள் என நடிப்பில் மிரள வைக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். அவரின் இப்படிப்பட்ட நடிப்பை பார்க்கும் போது நம் தமிழ் சினிமா ஒரு ஆகச்சிறந்த நடிகனை கண்டுகொள்ளாமல் இருக்கிறதோ என நினைக்க தோணுகிறது.

இந்துஜா மனைவியாக குடும்ப பெண்ணாகவும் அற்புதமாக நடித்துள்ளார். குறிப்பாக சட்னி அரைப்பதற்கு மிக்ஸி வாங்கி கொடுக்கவில்லை என கோவித்து கொள்ளும் இடத்தில் சிரிப்பை வரவைத்தாலும் ஒரு குடும்ப பெண்ணின் எதார்த்தம் அதுதான் அந்த கவலையை மிக அற்புதமாக பதிவு செய்துள்ளார்.

ஒரு சாதராண கதை என்றாலும் தான் சொல்ல வந்ததை ரசிகர்களுக்கு தெளிவாகவும் திரைக்கதையில் விறுவிறுப்பாகவும் சொல்லி முதல் படத்திலேயே வெற்றி கொடியை பறக்க விடுகிறார் ராம் குமார்.

படத்தின் கிளைமாக்ஸ் இப்படித்தான் இருக்கும் என நம்மால் யூகிக்க முடிகிறது. அது மட்டும் படத்தின் மைனஸ் என தோன்றுகிறது.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்.இசையும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது படத்தை மேலும். அதே போல ஜிஜூ கேமரா இரு இடங்களில் மட்டுமே அதிக கதை நடக்கிறது என்றாலும் அந்த இடங்களையும் கூட மிக அற்புதமாக காட்சி படுத்தியுள்ளார்.

ஒரு பார்க்கிங் இதற்கு சண்டையா என கேட்க தோன்றினாலும் அப்படி ஒரு கதையை எந்த அளவுக்கு விறுவிறுப்பாக கொடுக்க முடியுமோ கொடுத்து அதை ரசிக்க வைத்து வெற்றியடைந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ராம்குமார்.

 

 

 

Trending

Exit mobile version