News
பசுபதி நடிக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் ஆரம்பம் !

கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, ரோகிணி, அம்மு அபிராமி,மயில்சாமி மற்றும் பலர் நடிக்கும் புதிய படமொன்றை கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன் குமார், புரொடக்சன் 6-வது படைப்பாக தயாரிக்கிறார்.
இப்படம், சம கால மனிதர்கள், வாழ்வதற்கான போராட்ட சூழலில் சுயநலத்திற்காக செய்யும் தவறுகளை முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் ஆக்க்ஷன் கலந்து சொல்கிறது.
தனித்துவமான கதையம்சம் கொண்ட களங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் பசுபதி, முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, மற்றும் பிற நடிக நடிகையர், டெக்னிஷியன்கள் விபரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.