News

4 நாட்களில் உலக அளவில் 400 கோடி ரூபாய் வசூல் செய்த பதான் !

Published

on

சுமார் 4 ஆண்டுகளுக்கு பின்னர் ஷாருக்கான் நடிப்பில் பல தடைகளை எதிர்கொண்டு வெளியான படம் பதான். ஆக்‌ஷன் திரில்லர், திரைப்படமாக வெளியான இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்க யாஷ் ராஜ் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்திருந்தது.

இந்தியாவில் மற்றும் நாடு முழுவதும் 5 ஆயிரம் திரையரங்குகளில் வெளியான இப்படம் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியானது.

இந்த நிலையில் பதான் படம் இந்தியாவில் முதல் 3 நாளில் ரூ.150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளது.

அதன் படி

முதல் நாளில் இந்திய அளவில் மட்டும் ரூ.57 கோடியும்
முதல் நாளில் மட்டும் உலக அளவில் ரூ.100 கோடியும்
முதல் 2 நாட்களில் இந்திய அளவில் மட்டும் மொத்தமாக ரூ.100 கோடியும்.
இரண்டாவது நாளில் ரூ.70.50 கோடி வசூலும்
மூன்றாவது நாளில் ரூ.36 கோடி வசூல் செய்துள்ளது.

இதனால் 3 நாட்களில் மொத்தம் இந்திய அளவில் ரூ.157 கோடியை கடந்துள்ளது. 2019-ம் ஆண்டில் வெளிவந்த வார் திரைப்படம் ரூ.53.35 கோடியும், 2018-ம் ஆண்டு வெளியான தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் ரூ.52.25 கோடி வசூலுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.

நான்காவது நாளில் உலக அளவில் ரூ.400 கோடியை எட்டியுள்ளது பதான் திரைப்படம். இந்திய அளவில் இன்று ஒரு நாளில் மட்டும் ரூ.52 கோடியும், மொத்தமாக 4 நாளில் ரூ.200 கோடி வசூலையும் பெற்றது.

Trending

Exit mobile version