Connect with us
 

News

மார்ச் மாதம் தள்ளிப்போகும் சிம்புவின் பத்து தல !

Published

on

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் முப்தி. இப்படத்தை தற்போது பத்து தல என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து வருகிறார்கள். சிம்பு நாயகனாக நடித்து வருகிறார்.

சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷா இப்படத்தை இயக்கி வருகிறார். சிம்புவுடன் இப்படத்தில் கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார்.

முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதையில் உருவாகி வரும் இப்படத்தின் சில கிளிம்ப்ஸ் காட்சிகள் சிம்புவின் பிறந்தநாள் அன்று வெளியானது. இப்படம் டிசம்பர் 14 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் இறுதிக்கட்டப் பணிகள் இன்னும் முடிவடையாததால் பிப்ரவரிக்கு வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது பிப்ரவரி மாதத்தில் தனுஷ் நடித்துள்ள வாத்தி படம் உட்பட பல படங்களும் வெளிவரவிருப்பதால் பத்து தல திரைப்படம் மார்ச் மாதம் அடுத்த ஆண்டு வெளியாக திட்டமிட்டுள்ளனர் படக்குழு.