News
தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி !
தமிழகத்தில் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் இன்று தலைமை செயலகத்தில் காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் தலைமை செயலளர் மருத்துவ வல்லுநர்கள் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் நாளை மறுநாள் காலையுடன் ஊடரங்கு முடிவடைகிறது. இந்தநிலையில் ஊரடங்கு நீட்டித்து புதிய தளர்வுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தமிழகத்தில் 50% பார்வையாளர்களிடன் சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளாது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50 சதவீத பார்வையாளர்களுடன் நாளை மறுநாள் முதல் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படும். திரையரங்குகளில் பணியாற்றும் அனைவரும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை உரிமையாளர்கள் உறுதி செய்து கொள்ளவேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.