Connect with us
 

News

இணையத்தை வைரலாக்கிய தளபதி விஜய் எடுத்த புகைப்படம் !

Published

on

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு காட்சிகளும் முடிந்து விட்ட நிலையில் படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர்.

தற்போது லோகேஷ் கனகராஜ் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் விஜய்யின் இறுதியாக வெளியான 3 படத்தின் இளம் இயக்குநர்களின் புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் இயக்குநர் அட்லீ, மற்றும் பீஸ்ட் பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மற்றும் மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மூவரும் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

இவர்கள் மூவரும் செல்ஃபி எடுத்தது சிறப்பு இல்லை இவர்கள் செல்ஃபி எடுக்கும் போது இவர்களை தளபதி விஜய் புகைப்படம் எடுத்ததுதான் சிறப்பு.

இந்த செல்ஃபி புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த புகைப்படத்தை எடுத்தது தளபதி விஜய் என்று கூறியிருந்தார்.

விஜய் பட இயக்குநர் என்றாலே அவர்களின் புகைப்படம் வைரலாகும் நிலையில் இப்படத்தை எடுத்ததே விஜய் என்றால் சொல்லவா வேணும்.