News
தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் பிச்சைக்காரன் 2 !

விஜய் ஆண்டனி சினிமா பயணத்தில் மிகப்பெரிய வெற்றியையும் புகழயும் வாங்கி கொடுத்த திரைப்படம் பிச்சைக்காரன். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.இந்த நிலையில் பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிறைவடந்தது. இன்று இப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தது படக்குழு.
பிச்சைக்காரன் திரைப்படம் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது என்று அறிவித்தனர். பிச்சைக்காரன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது காரணம் இதன் முதல் பாகம் ரசிகர்களுக்கு ஏற்படுத்திய தாக்கம் அப்படிப்பட்டது.
விஜய் ஆண்டனி நடித்துள்ள இப்படத்தில் ஜோடியாக காவியா தபார் நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.