Connect with us
 

Reviews

பிச்சைக்காரன் 2 – விமர்சனம் !

Published

on

Movie Details

தமிழ் சினிமாவில் நாம் ஆள் மாறாட்ட கதை பல நூறு படங்கள் பாத்திருக்கிறோம் ஆனால் அதிலிருந்து சற்று வித்தியாசமாக யோசனை செய்து மூலை மூளை மாறட்ட கதையை கையில் எடுத்துள்ளார் விஜய் ஆண்டனி அப்படி எடுத்து இவரின் எழுத்து இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம்தான் பிச்சைக்காரன் 2.

விஜய் ஆண்டை இந்தியாவின் 7-வது மிகப்பெரிய பணக்காரர் சுமார் ஒரு கோடி லட்சத்துக்கு சொந்தக்காரர். இவரின் இந்த சொத்துக்கு ஆசைப்படும் நண்பர்கள் தேவ் கில், ஜான் விஜய், ஹரிஷ் பெரடி மூவரும் சேர்ந்து விஜய் ஆண்டனியை கொலை செய்து அவருக்கு மூலை மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கிறார்கள்.

அப்படி மாற்ற மாற்று மூளை ஒன்று வேண்டும் அதற்கு சரியான ஒருவர் வேண்டும் என்று தேடும் போது பிச்சைக்காரனாக இருக்கும் மற்றுமொரு விஜய் ஆண்டனியை கடத்தி அவரின் மூளையை எடுத்து பணக்கார விஜய் ஆண்டனிக்கு வைக்கிறார்கள். வெற்றிகரமாக முடிந்த பின்னர்தான் தெரிய வருகிறது பிச்சைக்காரன் விஜய் ஆண்டனி சாதாரண ஆள் இல்லை அவர் ஒரு மிகப்பெரிய கொலைக்காரன் என்று மூவருக்கும் தெரிய வருகிறது.

சிறு வயதில் தன் தங்கையை தொலைத்து விட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் வளர்கிறார். அங்கிருந்த் வெளியில் வந்ததும் ஒரு கொலை செய்து விட்டு சிறையில் 20 வருடம் இருக்கிறார். அங்கிருந்து வந்த விஜய் ஆண்டனியை கடத்தி கொலை செய்து அவரின் மூளையை பணக்கார விஜய் ஆண்டனிக்கு வைத்து பல கோடிகளை அடிக்க நினைக்கிறார்கள். இப்போது இருக்கும் பிச்சைக்காரன் விஜய் ஆண்டனி அடுத்து என்ன செய்தார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

படத்தின் ஆரம்பத்தில் காண்பிக்கப்படும் காட்சி நம்பிக்கைக்கு அப்பால் பட்டது என்றாலும் ஒரு வித்தியாசமான படத்தை பார்க்க போகிறோம் என்ற உணர்வை படத்தின் முதல் 30 நிமிட காட்சிகள் நமக்கு கொடுக்கிறது. அதன் பின்னர் பிச்சைக்காரன் விஜய் ஆண்டனிக்கு வரும் பிளாஷ்பேக் கதை நம்மை உருக வைக்கிறது.

படத்தின் நாயகியாகவும் விஜய் ஆண்டனியின் காதலியாகவும் வரும் காவ்யா தாபர் ஒரு கிளாமர் பாடல் சில காட்சி வந்ததும் காணாமல் போய் விடுகிறார்.

படத்தின் வில்லன்கள் தேவ் கில், ஜான் விஜய், ஹரிஷ் பெரடி என நாம் நினைக்கும் போது முதல் பாதியிலேயே கொலை செய்து விடுகிறார். அதனால் வேறு வழியில்லாமல் முதலமைச்சராக வரும் ராதா ரவியை வில்லனாக மாற்றி விடுகிறார்கள். யோகி பாபு விஜய் ஆண்டனியின் நட்பு பழக்கத்துக்காக இதில் நடித்து கொடுத்துள்ளார் போல 3 காட்சிகளில் மட்டுமே வந்து செல்கிறார்.

ஓம் நாராயணன் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை உயர்த்திருகிறது. வழக்கம் போல பின்னணி இசையிலும் இசையிலும் சிறப்பாகவும் ஆழமான ஒரு உணர்வை கொடுத்துள்ளார்.

படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் படத்தின் தரத்தை குறைக்கிறது அதை இன்னும் நன்றாக செய்திருக்கலாம். படத்தில் வரும் பில்ட் அப் காட்சிகளை வெகுவாக கட் செய்திருக்கலாம்.

பிச்சைக்காரன் முதல் பாகத்தில் அம்மா – மகன் பாசம் நம்மை காட்சிக்கு காட்சி நம்மை அழ வைக்கும் இந்த பிச்சைக்காரன் 2 அண்ணன் – தங்கை பாசம் அதை செய்கிறது.

இவையெல்லாம் இருந்தாலும் Anti Bikili என்ற ஒன்றை சொல்ல நினைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி அதை திரைக்கதையில் அழுத்தமாக சொல்ல தவறி விட்டால் விஜய் ஆண்டனி. இதை மிகச் சரியாக செய்திருந்தால் முதல் பாகம் போல பாசத்தில் உருவ வைத்திருக்கும்.

இதற்கு முன்னர் வந்த பிச்சைக்காரன் திரைப்படத்தில் பணக்கார விஜய் ஆண்டனி பிச்சைக்காரணாக நடிப்பது கதை பிச்சைக்காரன் 2 படத்தில் பிச்சைக்கார விஜய் ஆண்டனி பணக்காரணாக நடிப்பது கதை. இரண்டாம் பாகத்தில் வரும் விஜய் ஆண்டனிக்கு முகத்தில் சிறு மாற்றம் குரலில் மற்றம் என வித்தியாசம் காட்டி நடித்துள்ளார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் வெளித்து வாங்குகிறார்.
Pichaikkaran 2 Review By CineTime