Connect with us
 

Reviews

பிஸ்தா – விமர்சனம் !

Published

on

Movie Details

இயக்குநர் ரமேஷ் பாரதி இயக்கத்தில் மெட்ரோ ஷிரிஷ், மிருதுளா முரளி, சதீஷ், யோகி பாபு நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் பிஸ்தா.

பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்களில் விருப்பமில்லாமல் இருக்கும் மணப்பெண்களை அவர்கள் விருப்பம் போல கடத்தி அவர்களின் காதலர்களுடன் சேர்த்து வைப்பதை தொழிலாக செய்து வருகிறார் நாயகன் ஷிரிஷ். மிகப்பெரிய வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் குடும்ப மானத்தை பற்றி கொஞ்சம் கூட கவலை படமால் இப்படி ஒரு வேலையை செய்து வருகிறார்.

இப்படி இருக்கும் இவருக்கு படத்தின் நாயகியான மிருதுளா முரளி மீது காதல் வருகிறது. ஒரு நாள் மிருதுளா இந்த திருமணங்களை தடுக்கும் வேலையை விடும் படி சொல்கிறார். அதை விடவே முடியாது என திட்டவட்டமாக கூறிவிடுகிறார் ஷிரிஷ்.

இந்த நிலையில் ஷிரிஷுக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் திருமணம் நடக்கவில்லை என்றால் இவரின் குடும்பத்துக்கே கேடு என கூறுகிறார் ஜோசியர். மணப் பெண் இல்லாமலே ஷிரிஷ் திருமணத்துக்கு தேதி குறித்து மண்டபம் புக் செய்துவிட்டு மணப்பெண்ணை தேடி அலைகிறார்கள். இறுதியில் மணப்பெண் கிடைத்ததா இல்லையா? இவரின் காதல் என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

படத்தின் முதல் பாதி எங்கு செல்கிறது என்ன நடக்கிறது என்று தெரியாமல் படம் நகர்கிறது. ஷிரிஷ் இவரின் மாமாவாக வரும் சதீஷ் இருவரும் முடிந்த வரை காமெடியை கொடுக்க முயன்றிருக்கிறார்கள் ஆனால் சில இடங்களில் மட்டுமே சிரிப்பை வரவைக்கிறது.

கிராமத்து கதை களம் என்பதால் படத்தின் காட்சிகள் அனைத்துமே மிக அழகாக உள்ளது. அமைதியாகவும் அழகாவும் படத்தில் தோன்றுகிறார் படத்தின் நாயகன் ஷிரிஷ்.

படத்தில் இரண்டு கதா நாயகிகள் படத்தின் கிளைமாக்ஸ் வரை மிருதுளா முரளிதான் நாயகி என்று நினைத்துக்கொண்டிருந்த நமக்கு அவரின் தோழி அருந்ததி நாயர் கதா நாயகியாக மாறிவிடுகிறார். கண்டிப்பாக அதுதான் படத்தின் மிகப்பெரிய டுவிஸ் யாருமே எதிர் பார்க்கவில்லை.தரணி இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம். சில குறைகள் இருந்தாலும் ருசிக்கத்தான் செய்கிறது இந்த பிஸ்தா.

காலையில் திருமணத்தை வைத்துக்கொண்டு இரவு முழுவதும் பெண் தேடுவது என திரைக்கதை அமைத்து அதை மிக நன்றாக எடுத்துள்ளார். மிகவும் சுவாரஸ்யமான இந்த கதையை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி நகைச்சுவை காட்சிகளை அதிக கவனம் செலுத்தி இருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும்.
Pistha Review By CineTimee

[wp-review id=”44239″]