Connect with us
 

Reviews

பொய்க்கால் குதிரை – விமர்சனம் !

Published

on

Movie Details

இருட்டு அறையில் முரட்டு குத்து, இரண்டாம் குத்து, கஜினிகாந்த், ஆகிய படங்களை தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் பொய்க்கால் குதிரை என்ற படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

படத்தின் ஆரம்பமே பிரபு தேவாவை தலைகீழாக தொங்கவிட்டு ரத்தம் தெறிக்க தெறிக்க அடிக்கிறார்கள். ஒரு விபத்தில் தன் ஒற்றை காலை இழந்த பிரபுதேவாவுக்கு ஒரு பெண் குழந்தை மனைவி இறந்து விட்டார். இவரின் 5 வயது குழந்தைக்கு விசித்திரமான ஒரு நோய் உள்ளது அதை குணப்படுத்த சுமா ₹70 லட்சம் செல்வாகும் என மருத்துவர்கள் கூறிவிடுகிறார்கள்.

ஜெயில் கைதியான பிரகாஷ்ராஜ் பிரபுதேவாவுக்கு ஒரு யோசனை சொல்கிறார். அதாவது மிகப்பெரிய பணக்காரியான வரலட்சுமியின் மகளை நீ கடத்தினால் உன் மகளின் நோய்க்கு பணம் கிடைக்கும் என்று கூறுகிறார்.

அதன் பட வரலட்சுமியின் மகளை கடத்துவதற்காக செல்லும் பிரபுதேவாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அந்த சிறுமியை வேறு யாரோ கடத்தி விடுகிறார்கள். அந்த சிறுமியை கடத்தியது யார்? கடத்தப்பட்ட சிறுமி மீட்கப்பட்டாரா? பிரபுதேவாவின் மகளின் விசித்திரமான நோய் என்ன? குழந்தைக்கு ஆபரேஷன் நடந்து காப்பாற்றப்பட்டதா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

இதுவரை நடைத்த படங்களிலும் விட இப்படத்திம் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் பிரபுதேவா. காலை இழந்த மனிதனாக 5 வயது குழந்தைக்கு அப்பாவாக நடித்துள்ளார். படத்தின் ஆரம்பத்திலேயே இவரை தலைகீழாக தொங்க விட்டு அடிக்கும் காட்சிலேயே இவர் மீது நமக்கு பரிதாபம் வந்து விடுகிறது.

வரலட்சுமியின் மகளை கடத்துவதற்காக அந்த பள்ளிக்கூடத்துக்கு சென்று பயந்து பயந்து கண்கானிக்கும் காட்சியிலும் சரி, மருத்துவமணையில் மகள் காணாமல் போனதும் இவரின் பரிதவிப்பும் படம் பார்க்கும் நம்மை கண் கலங்க வைக்கிறது.

வலக்கமாக பிரபுதேவா படமென்றால் நடனம் தீயாக இருக்கும் இப்படத்திலும் ஒற்றைகாலுடன் இவர் ஒரு பாடகுக்கு நடனம் ஆடி அசர வைத்துள்ளார்.

கோடீஸ்வரியாக நடித்திருக்கும் வரலட்சுமி மிக்ச்சரியான தேர்வு பணக்காரர்களுக்கான திமிர், மிடுக்கு என சிறப்பு. சிறப்பு தோற்றத்தில் வரும் பிரகாஷ் ராஜ், ஜெகன், ரைசா வில்சன் என இருவரும் பலம் படத்திற்கு.

வரலட்சுமியின் கணவராக வரும் தேவா இப்படத்தில் முக்கியமான கதாப்பாதிரம் அதை சிறப்பாக செய்துள்ளார்.

ஆனாலும் முதல் பாதியில் சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் அப்படியே குறைந்து விடுகிறது. படத்தின் வில்லன் யார் என்பதை ரசிகர்களுக்கு மறைக்க பல டுவிஸ்டுகளை படத்தில் வைத்தாலும் மிக எளிதாக கண்டு பிடித்தவிட முடிகிறது என்பது ஒரு குறையாக உள்ளது.

டி.இமானின் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவாளர் பல்லு தன் முழு பங்களிப்பையும் இப்படத்தில் காட்டியுள்ளார்.

படத்தின் தலைப்பு ஏற்ற போல கொடுத்த பணத்துக்கு நமக்கும் ரசிக்கும் விதமான கதையை கொடுத்தமைக்காக இந்த Poikkal Kuthirai – யையின் ஆட்டத்தை ரசிக்காலாம்.
Poikkal Kudhirai Review By Cine Timee

[wp-review id=”43467″]