Connect with us
 

News

நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் பிரபு தேவா படம் !

Published

on

மிக நீண்ட இடைவெளிக்கு பின்னால் பிரபுதேவா நாயகனாக நடித்ததிரைப்படம் குலேபகாவலி அதனை தொடர்ந்து மெர்க்குறி, சார்லி சாப்ளின்2 என பல படங்களில் நடித்து வருகிறார்.

இயக்குனர் ஏசி.முகில் இயக்கியுள்ள பொன் மாணிக்கவேல் படத்தில் முதல் முறையாக அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் பிரபுதேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இசையமைப்பாளார் டி.இமான் இசையமைத்த இப்படத்தை ஜெயம் ரவி நடித்த டிக் டிக் டிக் பட தயாரிப்பாளர் நேமிசந்த் ஜாபக் தயாரித்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி திரைப்படம் வெளியாகவிருந்த நிலையில் கொரோன காரணமாக வெளியீடு தள்ளிப்போனது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாம். தற்போது கிடைத்த தகவலின் படி இப்படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தோடு ஒப்பந்தம் முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இது பற்றிய அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.