News

விக்ரம் பட வசூலை முறியடித்த பொன்னியின் செல்வன் !

Published

on

தமிழ் சினிமாவில் வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த சாதனை திரைப்படம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம். அந்த சாதனையை நீண்ட காலத்துக்கு விட்டு வைக்காமல் முறியடித்துள்ளது பொன்னியின் செல்வன் திரைப்படம்.

பொன்னியின் செல்வன் வெளியாகி இரண்டு வாரங்களிலேயே 400 கோடியை வசூல் செய்து 500 கோடியை கிட்டத்தட்ட நெருங்கி கொண்டிருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் விக்ரம் படத்தின் சாதனையை பொன்னியின் செல்வன் தற்போது முறியடித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் விக்ரம் 180 கோடி வசூல் செய்தது. ஆனால் பொன்னியின் செல்வன் 200 கோடி வசூலை நெருங்கிக்கொண்டிருக்கிறது. நேற்று, இன்றும் விடுமுறை என்பதால் வரும் வார வசூலுடன் சேர்த்து 200 கோடி வசூலை மிக எளிதாக கடந்து விடும் என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.

அப்படி மட்டும் கடந்து விட்டார் தமிழ் திரையுலக வரலாற்றில் பொன்னியின் செல்வன் படம்தான் தமிஅகத்தில் 200 கோடியை கடந்த திரைப்படம் என்ற பெருமையை பெறும்.

Trending

Exit mobile version