News
அமெரிக்காவிலும் வசூலில் கொடி கட்டி பறக்கும் பொன்னியின் செல்வன் !

மணிரத்னம் இயக்கத்தில் நேற்று உலகமெங்கும் பிரம்மாண்ட்மாக வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில் மட்டும் 80 கோடி வசூல் செய்தது இதனை மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனம் அறிவித்தது. தமிழ் சினிமாவில் முதல் நாளில் இந்த அளவு வசூல் செய்த முதல் திரைப்படம் இதுதான்.
அமெரிக்காவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் குறிப்பிடத்தக்க அளவில் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிமீயர் காட்சிகள் மற்றும் முதல் நாள் வசூல் இரண்டையும் சேர்த்து 2 மில்லியன் அமெரிக்க டாலருக்கு அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ 17 கோடி.
இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்ற காரணத்தால் இந்த வசூல் இன்னும் அதிகமாக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இல்ல தமிழகர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் இப்படம் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.