News
400 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் பொன்னியின் செல்வன் !

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஜஸ்வர்யா ராய், திரிஷா நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மிக பிரம்மாண்டமாய் கடந்த செப்டம்பர் மாதம் 30- தேதி வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன்.
திரைப்படம் வெளியாகி 10 நாட்களுக்கும் மேலாகவும் ஹவுஸ் புள் காட்சிகளாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.அது மட்டுமில்லாமல் இதுவரையில் இப்படம் ரூ.390 கோடி வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் கூறுகின்றன.
இன்றும் இப்படம் பல திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாகவே காணப்படுவதால் நிச்சயமாக ரூ.400 கோடி வசூலை உலக அளவில் கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவில் ஒரு தமிழ் திரைப்படம் மிக மிக விரைவாக 400 கோடி வசூல் சாதனை செய்யும் திரைபப்டம் என்ற பெருமை பொன்னியின் செல்வனுக்கே.