Reviews

பொன்னியின் செல்வன் – விமர்சனம் !

Published

on

Movie Details

பல ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் கதையை படமாக்க வேண்டும் என்று பல நடிகர்கள் முயற்சி செய்து அனைத்துமே தோல்வியில்தான் முடிந்தது. ஆனால் இது என் கனவு படம் அதை எடுத்து முடிப்பேன் என்று கூறி அதை இன்று செய்தும் காட்டியுள்ளார் அது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவுக்கு பெருமையும் சேர்த்துள்ளார் இயக்குநர் மணிரதனம்.

படத்தில் ஆரம்பத்தில் சோழ மன்னன் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் வடக்கில் தங்களின் சோழ சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த போர் புரிந்து பல இடங்களை கைப்பற்றி வருகிறார். இளைய மகன் அருண்மொழி வர்மன் இலங்கை நாட்டில் போர் புரிந்து அங்கு சோழ கொடியை பறக்க வைக்கிறார்.

இதற்கிடையில் சோழ நாட்டில் ஏதோ ஒரு ஆபத்து இருப்பதாக கூறி ஆதித்த கரிகாலன் தன் படை வீரரான வந்திய தேவனை அங்கு சென்று உண்மையை தனக்கு கூற வேண்டும் என கூறுகிறார்.

சோழரின் ஆட்சி அதிகாரம் அவரது மூத்த மகன் ஆதித்த கரிகாலனுக்கு செல்லக் கூடாது என நினைக்கும் நிதி அமைச்சர் பழுவேட்டையர் தனது சிற்றரசர்களுடன் சேர்ந்து சுந்தர சோழரின் பெரியப்பா மகன் மதுராந்தகனை சோழ அரசராக நியமிக்க வேண்டும் என திட்டம் போடுகிறார்கள்.

இதற்கிடையில் குந்தவை வந்தியதேவனை தூது அனுப்பு அருன்மொழி வர்மனை காப்பாற்றி கொண்டுவர வேண்டும் இங்கு என்று தூது அனுப்புகிறார். பாண்டிய மன்னனைக் கொன்றதால் ஆதித்த கரிகால்னையும், சோழ சாம்ராஜ்ஜியத்தையும் அழிக்க பாண்டிய் மன்னனின் படையினர் சபதமெடுக்கிறார்கள். பழுவேட்டையரின் மனைவியும், ஆதித்த கரிகாலனின் முன்னாள் காதலியுமான நந்தினியும் சோழ சாம்ராஜ்ஜியத்தின் அரியணை மேல் ஆசைப்படுகிறார். இப்படி பட்ட இக்கட்டான சூழலில் அடுத்த என்ன நடந்தது என்பதுதான் முதல் பாகத்தின் மீதிக்கதை.

ஒரு நாவலை படித்து புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல ஆனால் அதை படமாக்கிய விதம் அருமை. அதுவும் சும்மா இல்லை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார். இது தமிழ் படம்தானா இல்லை ஹாலிவுட் படமா என்று நம்மை சிந்திக்க வைக்கிறது. படத்தில் வரும் கடல், காடு, தஞ்சை அரண்மனை, இலங்கை தீவு, என படம் முழுவதும் பிரம்மாண்டம் மட்டுமே இருக்கிறது.

வந்தியத் தேவனாக வரும் கார்த்தி ஒரு குறும்பான கதாப்பாத்திரம் அதை நம் கண் முன் அப்படியே கொண்டு வந்து நிறுத்துகிறார். குந்தவை சந்திக்கும் போதும் சரி பூங்குழலியை சந்திக்கு போதும் சரி இவரின் குறும்பு தனத்தை பார்க்க முடிகிறது. அதை தாண்டி வீரத்திலும் சலித்தவர் இல்லை என்பதை படத்தின் முதல் காட்சிலேயே நமக்கு காட்டி விடுகிறார்.

ஆதித்த கரிகாலனாக வரும் விக்ரம் காதலியால் ஏமாற்ற சோகம் அதனால் வரும் வெறுப்பு தன் காதலி பழுவேட்டையருக்கு மனைவியாக இருப்பதால் நான் தஞ்சை வரமாட்டேன் என கோபப்படும் காட்சிகளில் சரி எதிரிகளை கொன்று நாட்டை கைப்பற்றுவதிலும் சரி ஆயுதம் இல்லாத போராளியை நான் கொலை செய்ய மாட்டேன் என சொல்லும் இடத்திலும் அப்ளாஸ் வாங்குகிறார்.

அருண்மொழி வர்மனாக வரும் ஜெயம் ரவி. படத்தின் இரண்டாம் பாதியில் மட்டும்தான் வருகிறார். அதில் அரின் வீரத்தையும், தந்தை மீது தன் நாடு மீது வைத்திருக்கும் பாசத்தையும் வெளிக்காட்டியுள்ளனர். இரண்டாம் பாகம் இவர்தான் எல்லாமே.

குந்தவை இளவரசியாக வரும் திரிஷா அண்ணன், காதலை விட தன் நாடுதான் முக்கியம் என அண்ணன் காதலை பிரித்து வைக்கும் இடத்திலும் சரி எதிரிகளின் சூழ்ச்சி அறிந்து புத்தியாலிதனமாக திட்டம் போட்டு காய் நகர்த்துவதும் என தன் ஒட்டு மொத்த நடிப்பையும் வெளிக்காட்டியுள்ளார். இந்த கதாப்பாத்திரத்துக்கு திரிஷாவை விட வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்ற அளவுக்கு நடித்துள்ளார்.

நந்தினியாக வரும் ஜஸ்வர்யா ராய் பச்சன் பேரழகி சூழ்ச்சியின் ஒட்டு மொத்த உருவம் என வியக்க வைக்கிறார் தன் நடிப்பால். தன்னை விட அதிக வயது கொண்ட பழுவேட்டையரை திருமணம் செய்து கொண்டு தன் அழகால் அவரையே அடிமையாக்கி தான் நினைக்கும் அனைத்தையும் சாதித்து கொள்ளும் ஒரு அழகான சூனியக்காரி.

பெரிய பழுவேட்டையராக சரத்குமார், சின்ன பழுவேட்டையராக பார்த்திபன் சோழ அரச கூட்டத்தில் இருந்து கொண்டே குழி பறிக்கும் கும்பல் இருவரும். ஒற்றனாக வரும் ஆழ்வார்க்கடி ஜெயராம், பல்லவனாக வரும் விக்ரம் பிரபு, பெரிய வேளார் இளைய திலகம் பிரபு, பாண்டிய படை தலைவன் கிஷோர், மதுராந்தகன் வேடத்தில் வரும் ரகுமான், பூங்குழலியாக வரும் ஜஸ்வர்யா லட்சுமி, இளவரசி சோபிதா துலிபாலா. அஷ்வின் என அனைத்து கதாப்பாத்திரங்களும் திறமையான நடிப்பு.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மற்றும் பின்னணி இசை இப்படத்தை உலக தரத்திற்கு கொண்டு செல்கிறது. ரவிமர்மனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. படத்தின் மிக முக்கியமான பிரம்மாண்டம் படத்தின் விஎபெக்ஸ் காட்சிகள்தான் அதுவும் படத்தின் இறுதி சண்டைக்காட்சிகள் எல்லாம் வியப்பின் உச்சம்.

பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுப்பதே மிகப்பெரிய சாதனை அதுவும் அதனை இரண்டு பாகங்களாக எடுப்பது என்பது ஆனால் முதல் பாகத்தை அனைத்து தரப்பு மக்களுக்கும் புரியும் படி எந்த அளவுக்கு சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு தரமாக கொடுத்துள்ளார். இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற ஆவலையும் எதிர்பார்ப்பையும் தூண்டும் விதமாக முடித்துள்ளாத் முதல் பாகத்தின் முடிவை.
பொன்னியின் செல்வன் Review By CineTime

[wp-review id=”44144″]

Trending

Exit mobile version