News
நிறைவு பெற்ற பொன்ராம் விஜய்சேதுபதி திரைப்படம் !

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்கும் பெயர் வைக்கப்படாத திரைப்படம். இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக மாடல் அழகி அனுகீர்த்தி வாஸ் நடித்துள்ளார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து வந்த நிலையில் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் செங்கபட்டு மாவட்டத்தில் நடந்து வந்த நிலையில் இன்று இப்படத்தின் ஒட்டுமொத்த காட்சிகள் எடுத்து படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது.
இப்படத்தில் விஜய்சேதுபதி போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்லுக் விரைவில் வெளிவரவிருக்கிறது.