Connect with us
 

News

கேன்ஸ் பட விழாவில் பூஜா ஹெக்டேவின் சூட்கேஸ் திருட்டு !

Published

on

பிரான்ஸ் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள நடிகை பூஜாவும் சென்றுள்ளார். அங்கு அவரின் சூட்கேஸ் திருட்டு போய்விட்டதாக தற்போத் தகவல் வெளியாகியுள்ளது.

பூஜா ஹேக்டேவின் அந்த சூட்கேசில் விலை உயர்ந்த ஆடைகள் மற்றும் விலை உயர்ந்த மேக்கப் பொருட்களை வைத்து இருந்ததால் அந்த சூட்கேஸ் மர்ம நபர்களால் திருடப்பட்டது என்று கூறப்படுகிறது.

இதனை அறிந்த பூஜா ஹெக்டே மற்றும் அவரின் உதவியாளர் பெரும் பதட்டத்தில் இருந்ததாகவும் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்ற பூஜா ஹெக்டே மாற்று உடை கூட இல்லாமல் இருந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திருட்டிலும் ஒரு நன்மை என்னவென்றால் காணாமல் போன அந்த சூட்கேஸில் தங்க வைர நகைகளை வைக்காமல் அவைகளை பூஜா ஹெக்டே கழுத்தில் அணிந்து இருந்ததால் அவை அனைத்தும் திருடு போகாமல் தப்பித்து விட்டதாக பூஜா ஹெக்டே பெரு நிம்மதி அடைந்துள்ளாராம்.