Connect with us
 

News

விஜய்யுடன் நடனம் ஆட காத்திருக்கும் பூஜா ஹெக்டெ விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம் !

Published

on

மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜார்ஜியாவில் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில்.

இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் அமைக்கப்படுள்ள பிரமாண்ட அரங்கில் நடக்கவிருந்த அரங்கில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது. அந்த படப்பிடிப்பை மீண்டும் தொடங்கப்படவுள்ளதாகவும் இப்படத்துக்காக சாலிகிராமத்தில் உள்ள பிரபல ஸ்டூடியோ ஒன்றில் பாடல் காட்சிக்கான அரங்கம் அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சின்ன டீமுடன் 2 வாரங்கள் இந்த பாடல் காட்சியை விஜய் மற்றும் பூஜா ஹெக்டெ நடிக்கவுள்ளனராம்.

கொரோனா 2வது அலையின் தாக்கம் குறைந்ததும் வரும் செப்டம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கலாம் என விஜய் கூறியிருந்த நிலையில் தற்போது இதன் தயாரிப்பு நிறுவனம் விரைவில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளது என கூறப்படுகிறது.