Connect with us
 

News

டாம் குரூஸ் நடிக்கும் மிஷன் இம்பாசிபிள் படத்தில் பிரபாஸா இயக்குனர் விளக்கம் !

Published

on

பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் வெற்றிக்கு பின்னர் பான் இந்தியா நடிகராக மாறிவிட்டார் நடிகர் பிரபாஸ். இதற்கு பின்னர் பிரபாஸ் பாலிவுட், ஹாலிவுட் என அடுத்த கட்டங்களுக்கு செல்ல வேண்டும் என எதிர்பார்த்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஹாலிவுட் ஆக்டர் டாம் குரூஸ் நடிக்கும் மிஷன் இம்பாசிபிள் பாகம் 7-ல் பிரபாஸ் நடிக்கிறார் என்ற தகவல் சமூக வலைத்தலங்களில் தீயாய் பரவி வந்தது.

பிரபாஸ் தற்போது ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்புக்காக இத்தாலி சென்றபோது ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் மெக்கோரி சந்தித்து கதை சொன்னதாகவும் சொல்லப்பட்டது. இந்த தகவலை கிறிஸ்டோபர் மெக்குவாரே டுவிட்டர் பக்கத்தில் அவரிடமே இது உண்மையா என்று ஒரு ரசிகர் கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு கிறிஸ்டோபர் மெக்கோரி பதிலளித்துள்ளார் அதில் அவர் கூறியதாவது:- பிரபாஸ் மிக திறமையான மனிதர்தான் ஆனால் நாங்கள் இருவரும் ஒருபோதும் சந்தித்தது இல்லை என்று கூறினார். இதன் மூலம் இந்த வதந்திக்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.