News

ஒரு விளம்பரத்தில் நடிக்க 150 கோடி நோ சொன்ன பிரபாஸ் !

Published

on

பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் பிரபாஸ். இதன் பின்னர் இவருக்கு படங்கள் வந்து குவிய ஆரம்பித்து விட்டது. தற்போது இவர் ராதேஷியாம், சலார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகும் ஆதுபுருஷ் படத்தில் ராமராக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் விளம்பர படமொன்றில் அதிக சம்பளத்துக்கு நடிக்க வந்த வாய்ப்பை பிரபாஸ் உதறிவுள்ளார். பிரபல மின்னணு பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் பிரபாசை அணுகி ஒரு வருடத்துக்கு தங்கள் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக இருந்து விளம்பர படங்களிள் நடிக்க வேண்டும் என்றும் இதற்காக ரூ.150 கோடி சம்பளம் தருவதாகவும் பேரம் பேசியது ஆனால் அதை ஏற்க பிரபாஸ் மறுத்துவிட்டார்.

முந்தைய விளம்பர படங்களில் நடிக்க பிரபாசுக்கு ரூ.18 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தனக்கு அதிக ரசிகர்கள் சேர்ந்துள்ளதால் விளம்பரங்களில் நடிப்பதில் அவர் மிகவும் கவனமாகவிருப்பதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version